ETV Bharat / entertainment

'ஆண்டவர் ஆட்டம்..!' : அரட்டும் 'விக்ரம்' ட்ரெய்லர்! - vikram

நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படமான ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

’ஆண்டவர் ஆட்டம்..!’ : அரட்டும் 'விக்ரம்' டிரைலர்

author img

By

Published : May 15, 2022, 9:12 PM IST

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் 'விக்ரம்' ட்ரெய்லர் இன்று(மே 15) வெளியானது. கமலின் கிளாசிக் டச்சையும், கமர்சியல் எலெமென்ட்களையும் சரியான அளவில் கலந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலக்கியிருக்கிறார் என்பது ட்ரெய்லர் காட்சிகளில் தெரிகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழ்சினிமாவின் ஆபத்பாந்தவன் அனிருத் இம்முறையும் மிரட்டியிருப்பார் என்பது ட்ரெய்லரின் பின்னணி இசையில் தெரிகிறது.

ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன் என அனைவருக்கும் சரியான திரைப்பங்கு இருக்கும் என்று தெரிகிறது. இம்மூவரின் காம்பினேசனில் காட்சிகளில் திரையரங்கு தெறிப்பது உறுதி. மேலும், இந்தப்படம் ”மாநகரம்” போல ஒரு ’ஹைப்பர் லிங்க்’ கதைக்களத்தைக் கொண்ட படமாகவும் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் முழுக்க,முழுக்க கமலை ரசித்து இந்தப்படத்தை எடுத்திருப்பார் என்று உணரமுடிகிறது. மொத்தத்தில் ’விக்ரம்’ ட்ரெய்லர் சமூக வலைதளங்களை இன்னும் சில நாட்கள் ஆட்கொள்ளும் என்பது திண்ணம்.

இதையும் படிங்க: ஒன்றியத்தை உசுப்பேற்றிய 'பத்தல பத்தல' பாடல்: கமலுக்கு வக்கீல் நோட்டீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.