சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் சமீபத்தில் நடிகர் விக்ரம் தனி நாயகனாக நடித்த படங்கள் சரியாக போகவில்லை என ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் பகிரப்பட்டன.
-
#thangalaan sambavam soon 🔥🔥 . One extraordinary teaser on its way soon 🔥🔥🔥 …. @beemji @StudioGreen2 @chiyaan …. 🔥🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#thangalaan sambavam soon 🔥🔥 . One extraordinary teaser on its way soon 🔥🔥🔥 …. @beemji @StudioGreen2 @chiyaan …. 🔥🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) October 20, 2023#thangalaan sambavam soon 🔥🔥 . One extraordinary teaser on its way soon 🔥🔥🔥 …. @beemji @StudioGreen2 @chiyaan …. 🔥🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) October 20, 2023
இந்நிலையில், தற்போது இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் 'தங்கலான்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பசுபதி, பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. முன்னதாக இப்படத்தின் கிளிம்ப்ஸ், நடிகர் விக்கிரம் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. அதில் விக்ரமின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. மேலும் 'தங்கலான்' படம் குறித்த அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் பாக்ஸராக நடித்துள்ள 'ஆண்டனி' படத்தின் டீசர் வெளியானது!
இந்நிலையில் இன்று (அக்.20) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித் தங்கலான் படத்தின் டீஸர் தயாராகிவிட்டது என்றும், ஒருசில தினங்களில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அப்படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், தங்கலான் சம்பவம் விரைவில் நடைபெற உள்ளதாகவும், ஒரு அசாதாரணமான டீஸர் விரைவில் வெளியாக உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமாரின் இப்பதிவு 'தங்கலான்' படத்தின் அப்டேட் குறித்து எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
முன்னதாக, இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா 'தங்கலான்' பற்றி கூறும் போது, இப்படம் உலகளாவிய திரைப்படமாக உருவாகுவதாகவும், இப்படத்தை எவ்வளவு மொழிகளில் மொழிப்பெயர்க்க முடியுமோ அத்தனை மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: கோலிவுட்டில் இயக்குநர் அவதாரம் எடுத்த மற்றொரு தயாரிப்பாளர்!