ETV Bharat / entertainment

ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ஓடிடி தளத்திலும் சாதனை படைத்துள்ளது.

ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’!
ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’!
author img

By

Published : Jul 12, 2022, 9:13 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜூலை 8 அன்று பிரத்யேகமாக வெளியானது.

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய திரைப்படமாக, இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பிளாக்பஸ்டர் “விக்ரம்” திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி பிரீமியர் மூலம் பல சாதனைகளை முறியடித்து, பம்பர் ஓப்பனிங்கை பதிவுசெய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் மிகப்பெரிய சாதனைகளை முறியடித்ததாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான “விக்ரம்” தனது பிளாக்பஸ்டர் ஓட்டத்தை ஓடிடியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரசிகர்கள் இந்த ஓடிடி ரிலீஸை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்கள். மெகா ஆக்‌ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த சிறந்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க அவர்களுக்கு அருமையான வாய்ப்பு இது.

கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற கூடுதல் மொழிகளிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் திரையிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன், ”விக்ரம் மீது நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பொழியும் அன்பும் பாசமும் இதயத்தை தொடுகிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் தான் விக்ரம் உருவாக்கப்பட்டது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதை ஒவ்வொரு பார்வையாளர்களின் வீடுகளிலும் கைகளிலும் கொண்டு சேர்த்துள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு தேசிய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று இதுவரையிலான, சாதனைகளை இப்படம் முறியடித்து வருவது, கொண்டாட்ட தருணமாகும். ஒட்டுமொத்த விக்ரம் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ’விக்ரம்’ படத்தை புகழ்ந்த கேஜிஃப் மற்றும் பிரேமம் பட இயக்குநர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.