சென்னை: தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் புகழ் பெற்றவர் சிவாங்கி. பாடகரான இவர் white swan events என்னும் நிறுவனத்துடன் இணைந்து நிகழ்த்தும் நேரடி இசை நிகழ்ச்சி (Live concert) நாளை பீனிக்ஸ் மாலில் நடைபெற உள்ளது.
இதில் சிவாங்கி பாடுவது மட்டுமல்லாமல் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடத்த உள்ளார். அவரோடு சந்தோஷ் பாலாஜி, செபஸ்டியன், வி.ஜே.கணேசன், லக்ஷ்மன், மேக்னஸ், அக்ராஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதுகுறித்து white swan events நிறுவனம் தரப்பில், ”The autumn Flea 2022 என்ற தலைப்பில் நாங்கள் வரும் Sep 9th, 10th, 11th ஆகிய மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம்.
இதில் முதல் நாள் விஜய் டிவி புகழ் சிவாங்கியின் Live concert நடைபெற உள்ளது. 2ஆம் நாள் டிஜே பிரசாந்த்தின் டிஜே நிகழ்ச்சியும், 3ஆம் நாள் Dream Zone நடத்தும் பேஷன் ஷோ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரித்விராஜ் மற்றும் கருண் ராமன் கலந்து கொள்கிறார்கள்.இவ்விழாவின் சிறப்பு என்னவென்றால் பார்வையாளர்கள் தங்களது செல்லப் பிராணிகளை அழைத்து வந்தும் ஷாப்பிங் செய்யலாம்” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வெளியானது 'நானே வருவேன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்