ETV Bharat / entertainment

"நம்ப முடியாத ஒன்னாருந்தாலும் அதான் உண்மை"; ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! - ramya nambeesan

raththam movie release date: நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருந்த 'ரத்தம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.

raththam movie release date
ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 7:38 PM IST

சென்னை: இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் (Infinity Film Ventures) தயாரிப்பில், இயக்குநர் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது தனித்துவமான கதைத் தேர்வினால், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகனாக மாறி வருகிறார் விஜய் ஆண்டனி.

முன்னதாக இவரது இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது அடுத்தத் திரைப்படமாக 'ரத்தம்' வெளியாக உள்ளது. தமிழ்ப்படம் 1 மற்றும் 2 ஆகிய நகைச்சுவை படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன்‌ இப்படத்தை இயக்கியுள்ளார்.

தனது வழக்கமான நகைச்சுவையான கதை களத்தில் இருந்து விலகி, மாறுபட்ட கதையை மையமாக கொண்டு படத்தை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்து இருந்தது.

இந்நிலையில் தற்போது அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என் படக்குழு அறிவித்துள்ளது. வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக 'ரத்தம்' உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது? - வெளியான அறிவிப்பு!

மேலும் இப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் என்பவர் கலை இயக்குநராகப் பணியாற்றி இருக்க, திலீப் சுப்பராயன் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'ரத்தம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி மூன்று மில்லியன் பார்வைகளை தாண்டி யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது. விஜய் ஆண்டனியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்தம்' படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தும் வகையில் நடிகரும் இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: விஷாலின் 'மார்க் ஆண்டனி' எவ்வித சிக்கலும் இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.