ETV Bharat / entertainment

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இரண்டாவது லுக்! - விஜய் ஆண்டனி

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள ‘ரத்தம்’ திரைப்படத்தின் இரண்டாவது லுக் அப்படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இரண்டாவது லுக்

author img

By

Published : Jul 25, 2022, 4:13 PM IST

சென்னை: Infiniti Film Ventures வழங்கும், இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இரண்டாவது லுக் வெளியானது. விஜய் ஆண்டனி நடிக்கும் "ரத்தம்" படத்தின் பரபரப்பான இரண்டாவது லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போலவே, இந்த இரண்டாவது லுக் வித்தியாசமானதாக, ஆர்வத்தை தூண்டும்படி அமைந்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் இந்தப் படத்திற்கு வலுவான தாக்கத்தையும் நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்தப் புதிய லுக் அந்த எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

இயக்குநர் CS.அமுதன் கூறுகையில், ' ‘ரத்தம்’ படம் இதுவரை தமிழ் திரையில் சொல்லப்படாத கதையை விவரிக்கும் ஒரு க்ரைம் டிராமா. இத்திரைப்படம் நாம் தினமும் பார்க்கும் ஒன்றைத் தான் முன்வைக்கிறது, ஆனால் சமூகத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்தை நாம் ஒரு போதும் உணரவில்லை என்பதே உண்மை’ என்றார்.

Infiniti Film Ventures சார்பில் கமல் போரா, பங்கஜ் போரா, G.தனஞ்செயன், B.பிரதீப், ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் போஸ்ட் பு‌ரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் ரிலீஸ், ஆடியோ, ட்ரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இதையும் படிங்க: 'கடவுளின் பெயரால்...' மாநிலங்களவையில் பதவியேற்றார் இளையராஜா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.