ETV Bharat / entertainment

விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது? - வெளியான அறிவிப்பு! - Director magizh Thirumeni

Vidaamuyarchi movie: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் மாத இறுதியில் அபுதாபியில் தொடங்கும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

Vidaamuyarchi movie
விடாமுயற்சி படத்தின் அப்டேட்ஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2023, 4:11 PM IST

சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக உருவான துணிவு திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்றும், அப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று அறிவிப்பு வெளியானது.

ஆனால் சில பல காரணங்களால் விக்னேஷ் சிவன் அப்படத்தில் இருந்து விலக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இப்படத்தை யார் இயக்குவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார் என்றும், இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இப்படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று பெயரிடப்பட்டது.

ஆனால் அதனை தொடர்ந்து எந்தவித சத்தமும் இல்லாமல் இருந்தது. ஆனாலும், படம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கிடையில் நடிகர் அஜித், உலகம் முழுவதும் பைக் ட்ரிப் சென்றுவிட்டார். சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அபுதாபியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இவர்கள், தற்போது மீண்டும் இணைகிறார்கள். சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அபுதாபியில் படப்பிடிப்பு முடித்துவிட்டு மேலும் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மகிழ் திருமேனி, ஆக்சன் படங்களை வித்தியாசமான திரைக்கதையில் இயக்குபவர் என்பதால், விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவரது மீகாமன், தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இவர் அஜித் படத்தை இயக்குகிறார் என்றால் இந்தப் படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இதையும் படிங்க: வெற்றிமாறன் கதையில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சூரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.