சென்னை: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா (Varisu Audio Launch Event ) இன்று (டிச.24) சென்னையில் நடைபெற்று வருகிறது. தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசை அமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வரும் பொங்கலுக்கு வாரிசு திரைப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். சன் டிவி இதன் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளதால் மற்ற ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்று மதியம் முதலே விஜய் ரசிகர்கள் ஏராளமானோர் நேரு ஸ்டேடியத்தில் கூடியுள்ளனர். பல பேர் டிக்கெட் இல்லாமல் உள்ளனர். எப்படியாவது விஜயை பார்த்துவிட வேண்டும் என்று வந்துள்ளனர். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் இன்று மாலை வெளியாக உள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய், கிறிஸ்துமஸை கொண்டாட குடும்பத்துடன் லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த அவரது தந்தை சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா சந்திரசேகரும் இசை விழாவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாரிசு, துணிவு குறித்து வடிவேலு கூறிய பதில் என்ன?