எச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ள படம் 'துணிவு’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது.
படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் வருவதை கட் செய்துள்ளனர். மேலும் ஒரு காட்சியில் சிறு குழந்தையை, தலைகீழாக தொங்கவிடும் காட்சியை 50 சதவீதம் குறைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு பாடல் காட்சியில் 'காந்திக்கும்’ என்ற வார்த்தையை மியூட் செய்துள்ளனர். மொத்தத்தில் 'U/A' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் ஆகும்.
இதேபோல் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ’வாரிசு’. தமன் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று இப்படமும் தணிக்கைக்கு சென்றது.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் எந்தவித கட்டும் கொடுக்காமல் 'U' சான்றிதழ் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு படங்களும் வருகின்ற பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திரைப்படத்துறையில் 3 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்