ETV Bharat / entertainment

இளையராஜா கச்சேரியில் பாடும் வடிவேலு! - Ilayaraja concert

மதுரையில் வரும் ஜூன் 26ஆம் தேதி நடைபெறவுள்ள இளையராஜாவின் கச்சேரியில் நடிகர் வடிவேலு கலந்து கொள்கிறார்.

இளையராஜா கச்சேரியில் பாடவுள்ள வடிவேலு!
இளையராஜா கச்சேரியில் பாடவுள்ள வடிவேலு!
author img

By

Published : Jun 16, 2022, 10:43 PM IST

NOISE AND GRAINS நிறுவனம் அண்மையில் 'ராக் வித் ராஜா' எனும் பெயரில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தியது. இதைத் தொடர்ந்து, "இசையென்றால் இளையராஜா " எனும் இசை நிகழ்ச்சியை நடத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இளையராஜா கச்சேரியில் பாடவுள்ள வடிவேலு!

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் வடிவேலு கலந்துகொள்ள உள்ளதாக NOISE AND GRAINS நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசும் வடிவேலு கூறுகையில், நான் பிறந்த மதுரையில் இசைஞானி அவர்கள் கச்சேரி நடத்த வருகிறார்கள். இதனைக் கேட்டதும் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கண்டிப்பாக நானும் கச்சேரிக்கு வருகிறேன், ஏனெனில் தரையில் பாடிக்கொண்டிருந்த என்னைத் திரையில் பாட வைத்தது அவர் தான். இளையராஜா எனக்கு 'எட்டணா இருந்தா எட்டூருக்கு என் பாட்டு கேக்கும்' எனும் பாடலை பாட வைத்து வாய்ப்பளித்தார்.

கச்சேரிக்கு வந்து மேடையில் அவருடைய இசையில் அவருடன் சேர்ந்து பாடி உங்களை மகிழ்விக்கிறேன்" அதில் தெரிவித்துள்ளார். வடிவேலுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

இதையும் படிங்க: சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா நடிப்பாரா?.... ரசிகர்கள் எதிர்பார்ப்பு!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.