ஹைதராபாத்: பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் (73) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்," உலகப் புகழ்பெற்ற தபேலா கலைஞர், வட இந்திய பாரம்பரிய இசையின் உலகளாவிய பிரதிநிதி, பத்ம விபூஷன் உஸ்தாத் ஜாகிர் உசேன் மறைவு மிகப்பெரிய இழப்பாகும்.
विश्वविख्यात तबलानवाज़, उत्तर भारतीय शास्त्रीय संगीत के वैश्विक प्रतिनिधि, पद्मविभूषण उस्ताद ज़ाकिर हुसैन साहब का निधन हमारे सांस्कृतिक परिदृश्य की बहुत बड़ी क्षति है।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) December 15, 2024
उस्ताद ने सिर्फ़ नाद को ही नहीं, शास्त्रीय और फ्यूज़न संगीत के साथ सिनेमा-संगीत को भी अपनी प्रतिभा से बदला और… pic.twitter.com/M988O2BfU8
உஸ்தாத் தனது திறமையால் ஒலியை மட்டுமல்ல, கிளாசிக்கல் மற்றும் ஃப்யூஷன் இசையையும் சினிமா இசையுடன் சேர்த்து அதற்கு முன்பைவிட உயர்ந்த அந்தஸ்தைக் கொடுத்துள்ளார்" என பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.
The rhythm of India paused today…
— anand mahindra (@anandmahindra) December 15, 2024
In tribute.
🙏🏽🙏🏽🙏🏽#ZakirHussain
pic.twitter.com/eknPqw4uKM