ETV Bharat / entertainment

ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன?

மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டிய ஜெயம் ரவியின் இறைவன், நடிகை நித்யா மேனன் நடித்துள்ள மாஸ்டர் பீஸ், சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள க்ரைம் திரிக்கரான பரம்பொருள் என எதிர்பார்த்து காத்திருந்த படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என இந்த வார ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட்கள் உங்களுக்காக.

இந்த வார ஓடிடி ரிலீஸ்: வெளியாக உள்ள படங்கள் குறித்த அப்டேட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 6:18 PM IST

சென்னை: திரையரங்குகளுக்குச் செல்ல வாய்ப்பில்லாத ரசிகர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த படங்களை ஓடிடி தளத்தில் பார்த்து மகிழ்வர். ஒவ்வொரு வாரமும் திரையரங்கில் வெளியான படங்கள் அல்லது புதிதாக வெளியாக உள்ள படங்கள் மற்றும் சீரிஸ்கள் ஓடிடி தலத்தில் ரிலீஸ் செய்யப்படும். அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) அன்று ஓடிடியில் வெளியாக உள்ள படங்கள் குறித்த சிறிய அப்டேட்டை பார்க்கலாம்.

இறைவன்: ஓடிடியில் வெளியீட்டுக்காக அதிகம் எதிர்பார்க்கப்பட்டுக் காத்திருந்த படம் இறைவன். தனி ஒருவன் படத்திற்குப் பின்னர் ஜெயம் ரவி மற்றும் நயந்தாரா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இறைவன் திரைப்படம் கடந்த மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து கலவையான விமர்சனங்களைப் பெற்ற இறைவன் திரைப்படம் வரும் 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

கூழாங்கல்: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து நடத்தும் ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான உலகளவில் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற கூழாங்கல் திரைப்படம் வரும் 27 ஆம் தேதி சோனி லைவில் வெளியாக உள்ளது.

சந்திரமுகி 2: இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் உருவான சந்திரமுகி 2 திரைப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோருடன் மஹிமா நம்பியார், லட்சுமி மேனன் மற்றும் சுபிக்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 27 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

பரம்பொருள்: பேராசை பிடித்த முரட்டுத்தனமான காவல் ஆய்வாளர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ள இந்த படம் சட்டவிரோத சிலை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத வியாபார உலகை விரிவாகக் காட்டியுள்ள இந்த படம் ஆஹா மற்றும் பிரைம் ஓடிடி தளங்களில் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

மாஸ்டர் பீஸ்: குடும்பத்துடன் ரசிக்கும் வகையில், நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான டிராமாவாக தயாரிக்கப்பட்டுள்ள மாஸ்டர் பீஸ் திரைப்படத்தின் நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சீரிஸ் வரும் 27ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

காஃபி வித் கரன்: பிரபல தயாரிப்பாளர், இயக்குநர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் கரண் ஜோஹரின் பிரபலமான ரியாலிட்டி ஷோ காஃபி வித் கரண். இந்த பிரபலமான பேச்சு நிகழ்ச்சியின் 8 வது சீசன் வரும் 27 ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இது மட்டுமின்றி தமிழில் "யாரோ" திரைப்படம் ஆஹாவிலும், தெலுங்கில் "ஸ்கந்தா" திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், "சுராபணம்" மற்றும் "கேஸ் 30" படங்கள் ஆஹா விலும், இந்தியில் "துரங்கா 2" zee5 தொடரிலும், "தி குட் நியூஸ்" ஜியோ சினிமாவிலும், கொரியன் சீரிசான காஸ்ட் அவே திவா நெட்பிலிக்ஸிலும் வெளியாக உள்ளது.

இதையும் படிங்க: 31 years of Devar Magan : சர்ச்சையும், பாராட்டும் சம அளவில் பெற்ற 'தேவர் மகன்'... 2ம் பாகம் எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.