ETV Bharat / entertainment

சந்தானத்தின் ’கிக்’ படத்தின் டிரைலர் வெளியீடு - Kick trailer

நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் ட்ரீட்டாக ’கிக்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.

சந்தானத்தின் ’கிக்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

author img

By

Published : Jan 21, 2023, 7:48 PM IST

சென்னை: சந்தானம் நடிக்கும் புதிய படம் ’கிக்’. இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரித்துவருகிறார். இப்படம் மூலம் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரெஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர்.

இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக 'தாராள பிரபு' படத்தில் நடித்த தான்யா ஹோப் நடித்துள்ளார். தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா, கிரேன் மனோகர், கிங்காங், கூல் சுரேஷ், சேது, அந்தோணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இது சந்தானத்தின் அக்மார்க் திரைப்படம் என்றும், குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடும் விதத்தில் கதை அமைந்துள்ளது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க:தமிழ்ப் படங்களில் பிஸியான நடிகர் சுனில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.