வாஷிங்டன்: ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான 'டைட்டானிக்' திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் வெளியாகி 25ஆவது ஆண்டைக் கடக்கவுள்ளது.
இதனையடுத்து இந்தப்படத்தின் 'ரீ மாஸ்டர்டு' பதிப்பு அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 'டைட்டானிக்' ரசிகர்களின் மத்தியில் மாபெரும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 'ரீ மாஸ்டர்டு' பதிப்பு '3D 4k HDR' படமாகத் திரையிடப்படுமென தெரிகிறது.
நடிகர்கள் 'லியானர்டோ டி காப்ரியோ', 'கேட் வின்ஸ்லெட்' ஆகியோர் நடிப்பில் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'டைட்டானிக்' திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பல மாதங்கள் ஓடி வசூல் சாதனைகளைப் புரிந்தது. இத்திரைப்படம் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை ஆகிய பிரிவுகளின் கீழ் 11 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. மேலும், ’டைட்டானிக்’ திரைப்படத்தின் 3D படிப்பு கடந்த 2012ஆம் ஆண்டு வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்று முதல் திரையரங்குகளில் அசோக் செல்வனின் 'வேழம்'..!