சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் துணிவு. இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதனையொட்டி இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரை ஒரே நாளில் 3 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்நிலையில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனை ஒட்டி வாரிசு படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரை ஒரே நாளில் 2.3 கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இதன் மூலம் ஒரே நாளில் அதிகம் பேர் பார்த்த ட்ரெய்லர் என்ற சாதனையை அஜித்தின் துணிவு திரைப்படம் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே இதுதான் அதிக பார்வையாளர்கள் பார்த்த முதல் படம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன் விஜய்-யின் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரெய்லரை 2.9 கோடி பார்வையாளர்கள் பார்த்திருந்தனர். அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் செய்த சாதனையை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Divya bharathi:நடிகை திவ்யா பாரதியின் ஹாட் புகைப்படங்கள்