ETV Bharat / entertainment

திரைக்கதம்பம்: சிவகார்த்திகேயன் முதல் சந்தானம் வரை... பரபரக்கும் கோலிவுட் அப்டேட்ஸ்!! - சந்தானம்

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி வட்டாரத்தில் இந்த வார முக்கிய நிகழ்வுகள் திரைக்கதம்பமாக தொகுக்கப்பட்டுள்ளது. மாவீரன் ரிலீஸ், தோனியுடன் கேக் வெட்டிய யோகிபாபு, வரும் வாரங்களில் கோலிவுட் ரிலீஸ், சந்தானம் பட டிரெய்லர் வெளியீடு என செய்தி தொகுப்பை காணலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 14, 2023, 3:21 PM IST

தமிழ்த் திரையுலகில் வாராவாரம் ஏராளமான படங்கள் வெளியாகி வந்தன. கடந்த வாரம் 7 படங்கள் வெளியானது. அனைத்துமே சிறிய படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அத்தனை படங்களும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன், ராஜ்மோகன் இயக்கத்தில் பாபா பிளாக் ஷீப் என இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன. இப்படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பது இனிவரும் நாட்களில் தான்‌ தெரிய வரும்.

சிவகார்த்திகேயனுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் படத்தின் வெற்றிக்கு இயக்குநர் மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''நண்பர் தயாரிப்பாளர் அருண் விஷ்வா அவர்களின் எல்லா கனவுகளும் நிறைவேறட்டும். வாழ்த்துகள் சிவகார்த்திகேயன் மற்றும் சகோ மடோன் அஸ்வின் உட்பட பெரு வெற்றியை கொண்டாடப்போகும் மொத்த மாவீரன் படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் ப்ரியமும்'' என்று பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து

தோனி உடன் கேக் வெட்டிய யோகிபாபு: இந்திய‌ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதல் முறையாக தமிழ்ப்படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இதனை தனது தோனி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு லெட்ஸ் கெட் மேரிட் (LGM) என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது தோனியுடன் சேர்ந்து யோகி பாபு கேக் வெட்டி மகிழ்ந்தார். பின்னர் தோனி, யோகி பாபு இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தோனி உடன் கேக் வெட்டிய யோகிபாபு
தோனி உடன் கேக் வெட்டிய யோகிபாபு

அடுத்த 2 வாரங்களில் கோலிவுட்டின் முக்கிய படங்கள் ரிலீஸ்: இம்மாதம் தொடக்கத்தில் சிறிய முதலீட்டு படங்கள் மட்டுமே வெளியானது. ஆனால், அவை எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படம் வெளியானது. அதனை தொடர்ந்து இன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரம் விஜய் ஆண்டனி நடிப்பில் கொலை, வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி, பிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன.‌ அதனைத்தொடர்ந்து 28ஆம் தேதி தோனி தயாரித்துள்ள எல்ஜிஎம், நடிகர் பரத் நடித்துள்ள லவ், சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ், ஆதி நடித்துள்ள பாட்னர் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 2 வாரங்களில் கோலிவுட்டின் முக்கிய படங்கள் ரிலீஸ்

சந்தானம் நடித்துள்ள ’டிடி ரிட்டர்ன்ஸ்’ டிரெய்லர் வெளியானது: காமெடி நடிகராக இருந்த சந்தானம் தொடர்ந்து தனி நாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் டிக்கிலோனா சமீபத்தில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன்பிறகு சில படங்கள் சொதப்பியது. ஆனாலும் அவர் தனி நாயகனாக நடித்துதான் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பிரேம் குமார் இயக்கத்தில் டிடி ரிட்டர்ன்ஸ் அதாவது டேர் டெவில் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சந்தானம் நடித்துள்ள ’டிடி ரிட்டர்ன்ஸ்’ டிரைலர் வெளியானது

இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. படம் இம்மாதம் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Jailer Update: ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்.. மிரள வைக்கும் ஜெயிலர் அப்டேட் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.