ETV Bharat / entertainment

பெரிய நடிகர்களுக்கே திரையரங்குகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன... சீமான்... - jeevi 2 audio launch

நடிகர் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜீவி 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய நடிகர்களுக்கே திரையரங்குகள் முக்கியத்துவம் கொடுக்கின்றன என்று தெரிவித்தார்.

பெரிய நடிகர்களுக்குத்தான் திரையரங்குகள் முக்கியத்துவம் தருகின்றன - சீமான்!

author img

By

Published : Aug 13, 2022, 5:03 PM IST

சென்னை: நடிகர் வெற்றி நடித்துள்ள ’ஜீவி - 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(ஆக.13) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், சீனு ராமசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமையா, அஸ்வினி, சுரேஷ் காமாட்சி, இயக்குநர் கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரிய நடிகர்களுக்குத்தான் திரையரங்குகள் முக்கியத்துவம் தருகின்றன - சீமான்

இந்த விழாவில் பேசிய நடிகர் வெற்றி, பார்ட்-2 எடுக்க எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் கதை கேட்டதும் எனக்கு பிடித்துவிட்டது. மாநாடு போன்ற பெரிய படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார் என்றார்.

இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “மாமனிதன் படத்தின் வெளியீட்டுக்கு திரை மறைவில் இருந்து உதவியவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. படங்களுக்கு திரையரங்குகளில் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் கிடையாது. ஓடிடி தளங்களிலும் தற்போது கிடைக்கின்றன என்றார்.

இதையடுத்து இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “தற்போது சினிமாவில் கேப்டன் ஆஃப் தி ஷிப் ஹீரோக்கள் தான். இயக்குநர்கள் இல்லை. இப்போது உள்ள இயக்குநர்கள் கற்றுக்கொள்வதில்லை. சிலரை மட்டுமே சொல்கிறேன்‌. திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடியில் வெளியானால் நல்லது. இது எனது தனிப்பட்ட கருத்து. இப்படம் வெற்றிபெறும் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், எனது படங்களைப் பற்றி நான்‌ அதிகம் பேசுவதில்லை. இப்படம் ஓடிடியில் வெளியாவது எனக்கும் வருத்தம்தான். தற்போது சிறிய படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதில்லை. வெற்றி ஒரு பண்புள்ள நல்ல கலைஞன்‌. இவருக்கு என்றும் தனியிடம் உண்டு என்றார்.

இறுதியாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தம்பி ராமையா இனி நடிக்க மாட்டேன் என்றார். அவர் கட்டாயம் நடிக்க வேண்டும். இல்லையென்றால் வீட்டு வாசலில் முற்றுகயிட்டுவிடுவோம். பாக்யராஜின் திரைக்கதை வித்தை அபூர்வமானது. திரையில் வருவதுதான் நல்லது. நாம் மேடையில் வாய் வலிக்க பலவற்றை பற்றி பேசினாலும் திரைப்படத்தில் நடித்ததை பற்றித்தான் மக்கள் பேசுகிறார்கள்.

திரைத்துறை அழியும் நிலைக்கு சென்றுள்ள நிலையில் ’ஆஹா’ உள்ளிட்ட ஓடிடி தளங்கள் உதவியாக உள்ளன. ஒரு சில பெரிய நடிகர்களுக்குத்தான் திரையரங்குகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. சிறிய கலைஞர்களுக்கு நல்வாய்ப்பு தருவது ஓடிடி தளங்கள்தான். சிறந்த படங்களுக்கு விருதுகள் பெற்று வரும் கலைஞர்களை இந்த அரசு கண்டுகொள்வதில்லை. கலையைக் கொண்டாடாத சமூகமாக இதுஉள்ளது. எழுத்தாளர்களைப் போற்றும் மாண்பும் இங்கு இல்லை. இங்கு நடிகர்தான் எல்லாமே. அரசு டாஸ்மாக் நடத்தும்போது திரைப்படம் தயாரிப்பதில் தவறில்லையே” என்றார்.

இதையும் படிங்க: வெந்து தணிந்தது காடு படத்தின் மறக்குமா நெஞ்சம் பாடல் நாளை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.