ETV Bharat / entertainment

தனுஷ் குரலில் இணையத்தில் வைரலாகி வரும் 'வா வாத்தி' பாடல்! - gv prakash

தனுஷ் நடித்து வெளியாகியுள்ள வாத்தி படத்தில் தனுஷ் பாடியுள்ள 'வா வாத்தி' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 24, 2023, 6:36 PM IST

சென்னை: தனுஷ் நடிப்பில் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனையடுத்து தனுஷ், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த வாத்தி படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கு மொழியில் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கில் 'சார்' என்ற பெயரிலும் தமிழில் 'வாத்தி' என்ற பெயரிலும் வெளியாகியுள்ளது.

கல்வி தனியார் மயமாவது குறித்து பேசிய வாத்தி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைக்கதை வலுவாக இல்லை என்றும், படம் வசூலில் குறைவில்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இவரது இசையில் ’வா வாத்தி’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தனுஷ், ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய வா வாத்தி பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தனுஷ் இப்பாடலை எழுதியுள்ளார். இந்த நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள 'வா வாத்தி' பாடல் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பொற்காலத்தில் பயணிக்கும் ‘மாடர்ன் டே மலையாள சினிமா’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.