சென்னை: ஒலிம்பியா மூவீஸ் S. அம்பேத்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில், கவின், அபர்ணா தாஸ் நடிக்கும் 'டாடா' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அழகான ரொமாண்டிக் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பார்வையாளர்களை என்டர்டெயின் செய்யும் நோக்கத்தில் பல விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது.
மொத்தப் படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா, படத்தின் டீஸர், ட்ரெய்லர், மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கே. பாக்யராஜ், ஐஷ்வர்யா, 'முதல் நீ முடிவும் நீ' படத்தின்புகழ் ஹரீஷ், 'வாழ்' படத்தின் புகழ் ப்ரதீப் ஆண்டனி மற்றும் பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
இந்தப் படத்திற்கு ஜென் மார்ட்டின் என்பவர் இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு , கதிர் அழகேசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'NO GUTS NO GLORY' வெளியானது துணிவு படத்தின் செகண்ட் லுக்!