சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் விடுதலை. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். இரண்டு பாகங்களாக இப்படம் தயாராகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
தற்போது 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. 'விடுதலை' பார்ட் 1 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றனர்.
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் ஏற்கனவே அறிவித்தபடி 'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
'விடுதலை' படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்குகிறது. படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் மற்றும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
'விடுதலை' திரைப்படம் அதன் பிரமாண்டத்திற்காகவும் ரசிகர்களிடையே பேசப்படுகிறது. கண்களைக் கவரும்படியான மிகப்பிரமாண்டமான மற்றும் உண்மையான படப்பிடிப்பு தளங்கள் 'விடுதலை' படக்குழுவின் உழைப்பைக் காட்டுகிறது.
இதையும் படிங்க:துணிவு படத்தின் கதாபாத்திரங்கள் அறிமுகம்!