ETV Bharat / entertainment

தள்ளிப்போகிறது பிசாசு 2 படத்தின் வெளியீடு

author img

By

Published : Aug 26, 2022, 9:10 PM IST

ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறது.

தள்ளிப்போகிறது பிசாசு 2 படத்தின் வெளியீடு
தள்ளிப்போகிறது பிசாசு 2 படத்தின் வெளியீடு

சென்னை: சைக்கோ படத்திற்குப் பிறகு மிஷ்கின் இயக்கியுள்ள படம் பிசாசு 2. 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார்.

இப்படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.முருகானந்தம் தயாரித்துள்ளார். கதையின் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்க, உடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைக்க, சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இப்படத்தை வருகின்ற 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்குத் தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்துள்ளது. இதனால், இப்படத்தின் சில காட்சிகளை நீக்கி மீண்டும் தணிக்கைக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளது. மறுதணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்தபிறகு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:இயக்குனர் பாரதிராஜாவுக்கு மேல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.