சென்னை: நடிகர் விமல் கிரமாத்து படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர். பசங்க, வாகை சூட வா படங்களின் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளவர்.
தற்போது நடிகர் விமல் நடித்த ''தெய்வமச்சான்'' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
விமல் நடித்து ஓடிடியில் வெளியான விலங்கு வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து நடிகர் விமலுக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால், முந்தைய படங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக அவரை சுற்றி பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இவர் நடிப்பில் இன்று வெளியாவதாக இருந்த ''குலசாமி'' என்ற படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ''குலசாமி'' படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ''MIK Productions தயாரிப்பில், விமல், தான்யா ஹோப் நடிப்பில், குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில், மக்கள்செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் 'குலசாமி'.
சஞ்சித் சிவா ஸ்டூடியோஸ் மூலம் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டது. மேலே கூறப்பட்ட தேதியில் உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் சந்திக்க நாங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழ்நிலை படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதற்குச் சாதகமாக இல்லை. எனவே, எங்களின் ''குலசாமி'' திரைப்படத்தின் வெளியீடு 21.04.23 எனும் திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து, உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் 05.05.23அன்று மாற்றப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''குலசாமி'' படத்தின் பிரச்னை தற்போது நீதிமன்றத்தில் உள்ளதாகத் தெரிகிறது. இந்த தேதியில் நிச்சயம் படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'இப்படி' செய்தால் யாருக்கு ஆதரவு இல்லை எனத்தெரியும்? - க்ளூ கொடுத்த ஓபிஎஸ்