ETV Bharat / entertainment

'ஓய்... நானா இறந்துட்டேன்' - வீடியோ வெளியிட்டு வதந்தி குறித்து கர்ஜித்த பிரபல நடிகர்! - கோட்டா சீனிவாச ராவ் வதந்தி

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு தான் நலமுடனும் வலிமையுடனும் இருப்பதாக நடிகர் கோட்டா சீனிவாச ராவ் வீடியோ வெளியிட்டுள்ளார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 21, 2023, 5:28 PM IST

தான் இறந்துவிட்டதாக வெளியான வதந்திக்கு வீடியோ வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகர்!!

சென்னை: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். தெலுங்கில் 1978இல் பிராணம் கரீடு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தமிழில் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் பெருமாள் பிச்சையாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அதன் பிறகு விஜய் ஹீரோவாக நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில் சனியன் சகடை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். தமிழில் சகுனி, தாண்டவம், மம்பட்டியான், ஆல் இன்‌ஆல் அழகுராஜா, கோ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தெலுங்கில் பாடகராகவும் டப்பிங் கலைஞராகவும் கலக்கியுள்ளார்.

சினிமாத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவர் பத்மஶ்ரீ விருதும் வாங்கியுள்ளார். நடிகராக மட்டுமின்றி அரசியலில் ஆந்திர மாநிலம், விஜயவாடா கிழக்கு தொகுதியில் எம்எல்ஏ ஆகவும் பதவி வகித்துள்ளார். இவரது மகன் பிரசாத்தும் நடிகராக சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இவரது மகன் உயிரிழந்தார். தனது கண் முன்னே மகன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை நினைத்து கோட்டா சீனிவாச ராவ் மிகவும் மன நிம்மதி இழந்து காணப்பட்டார். எனினும், படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார். தமிழ் படங்களில் இவர் பேசிய வசனங்கள் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.

இந்த நிலையில் கோட்டா சீனிவாசராவ் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. இதனால் ரசிகர்கள் இவருக்கு அஞ்சலி செலுத்த இவரது இல்லம் நோக்கி படையெடுத்து வந்துள்ளனர். தமிழ், தெலுங்கு உள்ளிட்டப் பல்வேறு திரைப் பிரபலங்கள் பலரும் கோட்டா சீனிவாசராவ் இறந்துவிட்டதாக நினைத்து தொலைபேசி வாயிலாக அஞ்சலி செலுத்த முயன்றுள்ளனர்.

இதனையடுத்து தான் உயிருடன் தான் இருக்கிறேன் என்று வீடியோ மூலம் கோட்டா சீனிவாசராவ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''நான் நலமுடனும் வலிமையுடனும் இருக்கிறேன். பொதுமக்கள் இதுபோன்ற தவறான செயல்களை ஊக்குவிக்க கூடாது. வீண் வதந்தி பரப்பாதீர்கள். மனிதனின் உயிருடன் விளையாடக் கூடாது. பணம் சம்பாதிக்க நிறைய வழி உண்டு; ஆனால் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்’’ என்று அந்த வீடியோவில் பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உலக மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகும் தங்கலான்!

இதையும் படிங்க: "விடுதலை"க்கு பின் பரபரக்கும் அப்டேட்ஸ்.. வெற்றி மாறனின் அதிரடி அறிவிப்புகள்..!

இதையும் படிங்க: PS 2: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் 'அக நக' பாடல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.