ETV Bharat / entertainment

ஆசிய திரைப்பட விருது 2023..  'PS-1' 6 பிரிவுகளில் பரிந்துரை.. ஹாங்காங் விரைந்தது படக்குழு.. - Recommendation 6 Sections in PS1 for asian award

ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள 'பொன்னியின் செல்வன்' படக்குழு ஹாங்காங் விரைந்துள்ளது.

Asian Film Awards 2023
ஆசிய திரைப்பட விருது 2023
author img

By

Published : Mar 11, 2023, 7:39 PM IST

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் (ponniyin selvan). அமரர் கல்கியின் சாகாவரம் பெற்ற புதினத்தை திரைவடிவமாக செதுக்கியிருந்தார் இயக்குனர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம், விக்ரம் பிரபு என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி உலகம் முழுவதும் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதனால் இரண்டாம் பாகத்திற்கு மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது‌. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் (PS-2) அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி அனைவரது நடிப்பும் மிகவும் பேசப்பட்டது. இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு சார்பில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதுவும் அடுத்த பாகத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க ஹாங் காங் சென்றுள்ளது 'பொன்னியின் செல்வன்' படக் குழு. மார்ச் 12 ஆம் தேதி (நாளை) ஹாங் காங்கில் நடைபெற உள்ள கௌரவமிக்க 16ஆவது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் "பொன்னியின் செல்வன் -பாகம் 1" பல்வேறு பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.

தற்போது இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் சார்பாக லைக்கா நிறுவனத்தில் இருந்து ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் ரவி வர்மன் ஆகியோர் ஹாங்காங் பயணம் மேற்கொள்கின்றனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் 6 பிரிவுகளில் திரைப்பட விருது வழங்கும் விழாவில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இது கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் நடிப்புக்கு கிடைத்த வெகுமதியாக அனைவரின் மத்தியிலும் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: முதலாளியின் வீட்டு விழாவிற்கு சீர்வரிசையுடன் வந்து அசத்திய வட மாநிலத்தவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.