ETV Bharat / entertainment

ஒரு திரைப்படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் - விஜய் சேதுபதி! - tamil Film Festival

20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

ஒரு திரைப்படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் - விஜய் சேதுபதி

author img

By

Published : Dec 23, 2022, 10:30 PM IST

சென்னை: 20ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 15 முதல் துவங்கி டிசம்பர் 22ஆம் தேதி (இன்றுடன்) நிறைவடைகிறது. இந்த திரைப்பட விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் கே. பாக்யராஜ், மனோபாலா, வெங்கட் பிரபு, சிம்பு தேவன், சீனு ராமசாமி, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோருடன் விருதை தேர்வு செய்யும் குழுவினர் கலந்துகொண்டனர். இதில் சிறந்த படைப்புகளுக்காக என்று 9 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகள் இரண்டு பாகமாகப் பிரிக்கப்பட்டு முதல் பாகமாக எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு special mention ஊமை விழி படத்துக்கும், அழகி படத்துக்காக லோகநாதனுக்கும், படத்தின் இயக்குநருக்கு ரூ.10 ஆயிரமும், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இரண்டாம் பாகமாக Features films category-ல் திரையிடப்பட்ட 12 தமிழ்ப்படங்களில் 9 படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த 9 விருதுகளை அடுத்த வருடம் 12 விருதுகளாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

Best Actress - கார்கி (சாய் பல்லவி)
Best Actor (2) - மாமனிதன் (விஜய் சேதுபதி), கிடா ('பூ' ராமு)
2nd Best Film - கசடதபற (சிம்புதேவன்)
Best Cinematography - இரவின் நிழல் (பார்த்திபன்)
Best Audiography - நட்சத்திரம் நகர்கிறது (அந்தோனி ரூபன்)
Best Editing - பிகினிங் - (பிரேம் குமார்)
Special Jury Award - இரவின் நிழல்
Special Mention (Certificate) Award - ஆதார்
Best film - கிடா

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பார்த்திபன், "நாளையின் சினிமாவான உங்கள் எல்லோருக்கும் வணக்கம்’’ என்று மேடையில் தான் வாங்கிய இரண்டு விருதுகளை, இயக்குநர் பார்த்திபன் தொட்டு வணங்கினார். ’நான் என் குருநாதரின் காலை தொட்டு கும்பிட்டேன், இப்போது இந்த விருதினை தொட்டு கும்பிடுகிறேன். சிலருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், எனக்கு கிடைத்துள்ள இந்த விருது பெற்ற தாய்க்கு, நான் பெற்ற குழந்தைக்கு சமம்.

நான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டபோது நீ ஹீரோவாக நடிக்கலாம் என்று என்னை ஊக்கப்படுத்தியவர் கே.ஆர். தான். இது போன்ற விருதுகளை பெரிதாக யாரும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆஸ்கர் போன்ற விருதுகளை தான் பெரிதாக எடுத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாடு அரசோடு சேர்ந்து நடத்தும் இந்த விருதுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று சிலருக்கு மட்டும் தான் தெரியும்.

ஒருவரிடம் எத்தனை குழந்தை என்று கேட்கும் பொழுது சிறிய குழந்தை, பெரிய குழந்தை எத்தனை குழந்தை என கேட்க மாட்டோம். அது போன்று தான் விருது என்றாலே அது விருதுதான். ஒவ்வொரு கைத்தட்டலும் எனக்கு கிடைத்த விருதுதான், மற்றவை பற்றி நான் கவலைப்படுபவன் கிடையாது. இந்த விருதுகளை நாம் மதிக்க வேண்டும். அப்போதுதான் நாளைய சினிமா சிறப்பாக அமையும்" எனவும் தெரிவித்தார்.

நிகழ்ச்சி மேடையில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய போது, ’வாழ்க்கையின் அனுபவமாக திரைப்படம் மாறி வருகிறது. முடிந்த அளவுக்கு ஒரு திரைப்படத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். சிறந்த படங்கள் எல்லோராலும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஒரு திரைப்படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் - விஜய் சேதுபதி
ஒரு திரைப்படத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் - விஜய் சேதுபதி

50 வருடம் வாழ்ந்த ஒரு மனிதனின் கதையை இரண்டரை மணி நேரத்தில் சொல்ல முடியும், எந்த ஒரு படத்தையும் விமர்சனங்கள் வாயிலாக பார்க்க வேண்டாம். அது நல்லதற்கல்ல. யூடியூப்பில் கெட்டது பேசினால் பணம் வருகிறது. விமர்சனங்கள் பார்வையில் திரைப்படங்கள் சரியாக பார்க்கப்படுகிறதா என்று தெரியவில்லை.

மாமனிதன் படத்துக்கான சிறந்த நடிகர் விருதுக்காக வழங்கப்பட்ட பரிசுத்தொகையை சென்னை சர்வதேச திரைப்பட குழுவுக்கு நன்கொடையாக வழங்குகிறேன். மாமனிதன் படத்துக்காக விருது வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி.

இந்த ஆண்டு எப்படி முடிந்திருந்தாலும் பரவாயில்லை. அடுத்த ஆண்டு புதியதாக தொடங்குங்கள். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று கூறி மேடையில் இருந்து விடைபெற்றார், விஜய் சேதுபதி.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ”எல்லா புகழும் இறைவனுக்கே என்று நான் சொல்ல மாட்டேன். எல்லா புகழும் என் ரசிகர்களுக்கே. விருதினை பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்த விருதினை தவற விட்டவர்களுக்கு அடுத்த முறை மீண்டும் விருது பெறுவதற்கு முன்னதாகவே என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ’’பார்த்திபா... உனக்கும் எனக்கும் தான் அடுத்த முறை போட்டி. அதற்காக நான் தயாராகிக் கொண்டு இருக்கிறேன். மேடையில் நின்று குருவாகிய நான் சிஷ்யனுக்கு சவால் விடுகிறேன். இந்த போட்டிக்கு நான் சிறப்பு விருந்தினராக வந்த காரணம் என்னுடைய குருநாதர் பாரதிராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்ததற்காகவும், என்னுடைய சிஷ்யன் பார்த்திபன் அதிக விருதுகளை பெற்றதற்காகவும் மட்டுமே. பாரதிராஜாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் இங்கு வர முடியவில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: பத்திரிகையாளர்கள் பாராட்டிய 'புரொஜக்ட் சி- சாப்டர் 2' திரைப்படம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.