நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படத்திற்கு 'வாரிசு' என தலைப்பு வைத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். குடும்பப் பின்னணியில் பின்னப்பட்ட எமோஷனல் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், சரத்குமார், குஷ்பூ, சங்கீதா, யோகி பாபு என ஓர் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
வெகு நாட்களாக இப்படத்தின் டைட்டில் 'வாரிசு' என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த டைட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
#Varisu pic.twitter.com/b2bwNNAQP8
— Vijay (@actorvijay) June 21, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Varisu pic.twitter.com/b2bwNNAQP8
— Vijay (@actorvijay) June 21, 2022#Varisu pic.twitter.com/b2bwNNAQP8
— Vijay (@actorvijay) June 21, 2022
மேலும், தலைப்பின் கீழ் 'The boss returns' என்ற டேக் லைனுடன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஸ்டைலான பிஸ்னஸ் மேன் அவதாரத்தில் விஜய் அமர்ந்துள்ளார். நாளை விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், விஜய் பிறந்த நாள் ட்ரீட்டாக ரசிகர்களுக்கு கிடைத்த இந்தச் செய்தியை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.