2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் பயோபிக் கன்னட மொழியில் படமாக்கப்படுகிறது. ’அரபி’ என்ற பெயரில் தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தில் விஸ்வாஸுக்கு பயிற்சியாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்க அண்ணாமலையை அணுகியுள்ளனர்.
![’நடிகர் அவதாரம் எடுக்கும் பாஜக அண்ணாமலை..!’ : ரூ.1 மட்டுமே சம்பளம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2022-05-27-at-12540-pm_2705newsroom_1653644500_292.jpeg)
ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாத அண்ணாமலை, ’கதையைச் சொல்லுங்கள் கேட்போம்’ எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் கூறிய கதையைக் கேட்டதும் அண்ணாமலைக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால் நடிக்க உடனே ஓகே சொல்லிவிட்டாராம். மேலும், இந்தப் படத்தில் நடிக்க ரூ.1 மட்டுமே சம்பளம் பெற்றுள்ளாராம், அண்ணாமலை.
அந்த ’அரபி’ திரைப்படத்தில் அண்ணாமலை வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: Thalapathy 66: நிறைவடைந்தது 'தளபதி 66'-ன் முதல்கட்டப் படப்பிடிப்பு!