சென்னை: Cathy & Raphy பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள குறும்படம் ‘சஷ்தி’. ஜூட் பீட்டர் டேமியான் என்பவர் இந்த தமிழ் குறும்படத்தின் கதையை எழுதி இயக்கி உள்ளார். 30 நிமிடங்கள் ஓடும் விதமாக உருவாகியுள்ள இந்த குறும்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஐ ட்யூன்ஸ் மற்றும் கூகுள் பிளே மூவிஸ் ஆகியவற்றில் ரிலீசானது.
தாய்க்கும் மகனுக்குமான உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது இந்த குறும்படம். தான் வளர்ப்பு மகன் என்பதை அறியாமலேயே வளரும் சிறுவன் ஒருவன், சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவரை எப்படி கடவுள் என நினைக்கிறான். அந்த அளவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரை பற்றிய அவனுடைய அபிப்ராயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை அழகாக சொல்கிறது.
இந்த குறும்படம். இந்த படம் லைவ் ஆடியோ ரெக்கார்டிங் முறையில் உருவாகியுள்ளது தனிச்சிறப்பு. செம்மலர் அன்னம், லிசி ஆண்டனி, மாஸ்டர் ஜெப்ரி ஜேம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ‘சஷ்தி’ குறும்படம் டோக்கியோ முதல் டொரண்டோ வரை, 25 திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 59 விருதுகளை வென்றுள்ளது.
அடிப்படையில் ஒரு சார்டட் அக்கவுண்டன்ட் ஆன ஜூட் பீட்டர் டேமியான் கிட்டத்தட்ட அதே துறையில் 30 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திரைப்பட இயக்கம் மீது இருக்கும் ஆர்வத்தால் எல்வி பிரசாத் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து திரைப்பட இயக்கம் கற்றுக்கொண்டவர். தனது முதல் படைப்பாக இந்த ‘சஷ்தி’ என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார்.
“30 நிமிடங்களுக்கு குறைவான நேரமே ஓடக்கூடிய இந்த குறும்படத்தை ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டாலும், இதற்கான கதை மற்றும் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஆனது” என்கிறார் ஜூடு பீட்டர் டேமியன்.
இதையும் படிங்க: ’நட்சத்திரம் நகர்கிறது’ ட்ரெய்லர் வெளியானது...