ஜீ ஸ்டூடியோ - போனி கபூரின் பே வியூ புரோஜக்ட் மற்றும் ரோமியா பிக்சர்ஸ் ராகுல் இணைந்து தயாரித்திருக்கும் 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை, சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திரையரங்கில் பார்த்தார். படத்தைப் பார்த்த பின் “நெஞ்சுக்கு நீதி” படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் என அனைத்து படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மே மாதம் 20 அன்று வெளியாகவுள்ள “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இதையும் படிங்க: நடிப்புக்கு முழுக்கு - அரசியலில் ஆழப்பதியவுள்ள உதயநிதி!