ETV Bharat / entertainment

தமிழ் படத்துக்கு தான் முன்னுரிமை… வாரிசு குறித்து சந்தானம் பேச்சு...

தமிழ் படங்கள் வெளியாகும் போது நம் படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம். அதுபோல அந்தந்த மொழி படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என வாரிசு பட விவகாரம் குறித்து சந்தானம் கூறினார்.

வாரிசு குறித்து சந்தானம் பேச்சு
வாரிசு குறித்து சந்தானம் பேச்சு
author img

By

Published : Nov 19, 2022, 10:06 PM IST

சென்னை: சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சந்தானம், நடிகை ரியா சுமன், இயக்குனர் மனோஜ், புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் புகழ் பேசுகையில், அனைவருக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள். இப்போது எல்லாம் மைக்கை கண்டால் எதுவும் தவறாக பேசி விடுவோமோ என்று மயக்கம் வருகிறது. இப்படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. எந்த விஷயமாக இருந்தாலும் சந்தானத்திடம் கேட்டுக் கொள்வேன்.

நடிகர் சந்தானம் பேசியது, சந்தானம் படம் என்றாலே காமெடி எதிர்பார்க்கிறார்கள். அது ஒரு பிராண்ட் ஆக மாறிவிட்டது. இப்படத்தில் தான் முதன் முதலில் என்னை மாற்றினார்கள். இப்படத்தில் காமெடி கொஞ்சமாக இருக்கும். இப்போது இருக்கும் காலகட்டத்தில் ரீமேக் படம் எடுப்பது சவாலான விஷயம். யுவனுக்கு மிகப் பெரிய நன்றி. யுவனின் இசையில் படம் பார்த்தபோது வேறு மாதிரி ஆகிவிட்டது.

விக்ரம் பட கதாபாத்திரம் மாஸான ஏஜென்ட். இவன் தமாஷான ஏஜென்ட். மக்கள் எப்போதுமே புத்திசாலிகள் தான். நல்ல படங்களை வெற்றிபெற வைப்பார்கள். வாரிசு பட விவகாரம் குறித்து கேள்விக்கு, தமிழ் படங்கள் வெளியாகும் போது நம் படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்போம். அதுப்போல அந்தந்த மொழி படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எந்தப் படம் நன்றாக உள்ளதோ அந்தப் படம் ஓடும்.

செய்தியாளர்கள் பேட்டியில் சந்தானம் கூறியதாவது, “வாரிசு பட விவகாரம் பற்றி அந்த மாநில தயாரிப்பாளர்கள் மற்றும் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் பேசி சரிசெய்வார்கள். நாம் இங்கிருந்து பேசி முடிவு செய்ய முடியாது. வாரிசு பட தயாரிப்பாளர் அந்த மாநிலத்தவர் அவர் பேசி படத்தை வெளியிடுவார்.

நாம் தமிழ் படத்திற்கு முதலில் முன்னுரிமை கொடுப்போம். விஜய் அங்கு படம் நடிக்கிறார் என்றால் நாம் இங்கிருந்து சப்போர்ட் செய்வோம். பொங்கலுக்கு வாரிசு மற்றும் துணிவு இரண்டு படங்களையும் பார்ப்பேன்” என்றார்.

இதையும் படிங்க: கடற்படை பேருந்து விபத்து - கடற்படை வீரரின் கர்ப்பிணி மனைவி, குழந்தை பலி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.