ETV Bharat / entertainment

Tamanna: நடிகர் விஜய் வர்மாவுடன் காதல்.. மனம் திறந்த நடிகை தமன்னா..! - மனம் திறந்த நடிகை தமன்னா

நடிகை தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருவதாக பல மாதங்களாக வதந்திகள் பரவி வந்த நிலையில், விஜய் வர்மாவை காதலிப்பதாக நடிகை தமன்னா உறுதிபடுத்தியுள்ளார்.

Tamannaah Bhatia
தமன்னா
author img

By

Published : Jun 13, 2023, 1:18 PM IST

ஹைதராபாத்: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். தற்போது தமிழில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

நடிகை தமன்னா(Tamannaah Bhatia) பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் வேளையில், அவரது திருமணம் குறித்த வதந்திகள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது. ஆனால், தனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கெனவே அவர் கூறியிருந்தார். அதனால், தமன்னாவிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்ய உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வதந்திகள் பரவின. ஆனால், இதற்கு தமன்னா மறுப்பு தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு நடிகர் விஜய் வர்மாவும் நடிகை தமன்னாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதற்கு ஏற்றாற்போல், விஜய் வர்மாவும், தமன்னாவும் சேர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தன. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இருவரும் முத்தமிடுவது போன்ற வீடியோவும் வெளியாகி வைரலானது. அதேபோல், காதலர் தினத்தன்று இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆனால், அப்போதும் இது போன்ற வதந்திகளுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை, அது பற்றி பேச ஒன்றுமில்லை என்று தமன்னா கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை தமன்னா, நடிகர் விஜய் வர்மா உடனான காதல் குறித்து மனம் திறந்துள்ளார். அப்போது பேசிய அவர், "ஒருவருடன் படத்தில் நடிப்பதாலேயே காதல் வந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. நான் பல நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால், காதலுக்கும் அவர்கள் பார்க்கும் வேலைக்கும் சம்மந்தம் இல்லை. ஒருவர் மீது காதல் ஏற்படுவது என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம் என்று நம்புகிறேன். அதனால், நாங்கள் ஒன்றாக நடித்தது காதல் ஏற்பட காரணம் இல்லை. அவர் எனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்ததால், அவருக்காக நானும் சில கட்டுப்பாடுகளை விட்டு வெளியே வந்துவிட்டேன்.

இந்தியாவில் உள்ள பெண்கள் யாரோ ஒருவருக்காக தங்களது முழு வாழ்க்கையையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால், அவருடன் நான் இருந்தபோது, நான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கியது போல் உணர்ந்தேன். நான் எதுவும் செய்யாமலேயே அந்த உலகத்தைப் புரிந்து கொண்ட ஒருவர் என்னுடன் இருக்கிறார். அவர் என் மீது அதிக அக்கறை கொண்டவர். அவர்தான் என் மகிழ்ச்சிக்கான இடம்" என்று தெரிவித்துள்ளார். நடிகை தமன்னாவும், நடிகர் விஜய் வர்மாவும், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் 29ஆம் தேதி நெட்ஃபிளிக்சில் வெளியாகிறது.

இதையும் படிங்க: Jailer: 'தியேட்டரில் சந்திப்போம்'..ஜெயிலர் படப்பிடிப்பை நிறைவு செய்த உற்சாகத்தில் படக்குழு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.