ETV Bharat / entertainment

சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர்! - டி ராஜேந்திரன்

உடல்நலக் குறைவால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் மற்றும் இயக்குநர் டி.ராஜேந்தர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பவுள்ளார்.

சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர்!
சென்னை திரும்புகிறார் டி.ராஜேந்தர்!
author img

By

Published : Jul 21, 2022, 3:39 PM IST

லட்சிய திமுக கட்சியின் தலைவரும், பன்முக கலைஞரான டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக ஜூன் 14 அன்று அமெரிக்கா சென்றார். இந்நிலையில், அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்து, குடும்பத்தினருடன் ஜூலை 22 அன்று அதிகாலை 2 மணியளவில் சென்னை திரும்புகிறார்.

டி.ஆர் தாயகம் திரும்பும் அதே நாளில் தான் அவரது மகன் சிலம்பரசன் மற்றும் ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள 'மஹா' திரைப்படம் வெளியாகிறது.

வட அமெரிக்கா தமிழ் சங்கத்தை சேர்ந்த பால சுவாமிநாதன் மற்றும், கால்டுவெல் ஆகியோர் டி ராஜேந்தரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். டி.ஆரின் இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோர் அவருடன் நாடு திரும்புகின்றனர்.

சென்னை வந்த பின் முதலில் தனது சிகிச்சைக்காக உதவி செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து டி.ஆர் நன்றி கூறுகிறார். தான் முழு உடல் நலம் பெற்று மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் துடிப்புடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள், குடும்ப நண்பர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டி ஆர் நன்றி தெரிவித்துள்ளார். லட்சிய திமுக தொண்டர்கள் டி.ஆருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இதையும் படிங்க: வாரிசு படத்தில் விஜய் பெயர் இதுதானா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.