ETV Bharat / entertainment

ட்விட்டரில் பாராட்டு மழையில் 'சுழல் தி வோர்டெக்ஸ்' - Suzhal

இயக்குநர்கள் காயத்ரி & புஷ்கர் ஆகியோரால் திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்பட்ட 'சுழல் தி வோர்டெக்ஸ்' தொடரை ட்விட்டரில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.

ட்விட்டரில் பாராட்டு மழையில் ’சுழல் தி வோர்டெக்ஸ்’

author img

By

Published : Jun 20, 2022, 7:58 PM IST

இயக்குநர்கள் காயத்ரி & புஷ்கர் ஆகியோரால் திரைக்கதை எழுதப்பட்டு, உருவாக்கப்பட்ட ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத்தொடரில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நடிகர்கள் கதிர், ஆர். பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்து, இயக்குநர்கள் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் தயாரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத்தொடர், தற்போது தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமல்லாமல், பிரெஞ்சு (பெர்ஸியன்), ஜெர்மன், இத்தாலியன், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் வசனங்களுடன் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தத் தொடர் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலராலும் ட்விட்டரில் பாராட்டப்பட்டு வருகிறது. இந்தத் தொடர் குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஒரு அற்புதமான க்ரைம் த்ரில்லர்! சுழல்', எனவும்,

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் , 'சுழல் ஒரு திரை விருந்து மற்றும் தமிழில் ட்ரெண்ட் செட்டிங் தொடர்' எனவும்,

இயக்குநர் ராஜமெளலி 'சுழல் தொடரை உருவாக்கியதைக் கண்டு வியப்படைகிறேன். புஷ்கர் காயத்ரிக்கு எனது வாழ்துகள்’ எனவும்;

நடிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், 'தமிழில் உருவாக்கப்பட்ட சிறந்த தொடர்', என்றும்;

’ஒரே அமர்வில் அமர்ந்து இரவு முழுவதுமாக மொத்த சீசனும் பார்த்தாகிவிட்டது. தூக்கமும் வரல. போர் அடிக்கவும் இல்ல’ என இயக்குநர் நவீன் கூறியுள்ளார்.

இவர்கள் மட்டுமின்றி மேலும் பல பேர் தொடர்ந்து ’சுழல் தி வோர்டெக்ஸ்’ தொடரைப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: Thalapathy 66: ஜூன் 21 மாலை 6:01 முதல் ‘தளபதி 66’ ஃபர்ஸ்ட் லுக்..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.