ETV Bharat / entertainment

சன்னி லியோன் நடித்த 'ஓ மை கோஸ்ட்’ ஆடியோ வெளியீட்டு விழா! - sunny leone movie trailer

பாலிவுட் நடிகை சன்னி லியோன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழா

author img

By

Published : Nov 3, 2022, 12:46 PM IST

சன்னி லியோன் நடித்துள்ள ”ஓ மை கோஸ்ட்” படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் தங்கர் பச்சான், ஆர்கே.சுரேஷ், ரமேஷ் திலக், ஜிபி.முத்து, பாலா, ஜூலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தங்கர் பச்சான், “தயாரிப்பாளர்களை காப்பாற்ற யாருமில்லை. யாருக்கும் அவர்களின் நலன் பற்றிய அக்கறை இல்லை. எனது கருமேகங்கள் கலைகின்றன திரைப்படம் இதுவரை இல்லாத படமாக இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்களை யாரும் கண்டுகொள்வதில்லை. சினிமாத்துறை இன்றைக்கு சிக்கலில் உள்ளது.

நூறு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இன்று வரை ஹீரோக்களின் பின்னால் சிக்கியுள்ளோம். சிறிய படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை” என தெரிவித்தார்.

ஆர்கே.சுரேஷ் பேசுகையில், ”மகேஷ் பாபு படத்தில் நடிக்கிறேன். நான் சன்னி லியோனின் தீவிர ரசிகன். சன்னி லியோனை வைத்து எனது தயாரிப்பில் படம் பண்ண ஆசை” என தெரிவித்தார்.

படத்தில் நடித்துள்ள ஜிபி.முத்து மேடையில் பேசும் போது தயாரிப்பாளர் பெயர் என்ன என்று கேட்டது சிரிப்பலையை கிளப்பியது. பிறகு தொடர்ந்து பேசிய அவர், “இதுதான்‌ எனது முதல் படம். சன்னி லியோன் யார் என்று தெரியாது. பிறகுதான்‌ அவரது படத்தை பார்த்தேன். படம் என்றால் போட்டோதான் பார்த்தேன்” என்றார்.

இயக்குநர் யுவன் : “சினிமாவில் இடைவெளி என்பது நமக்கு தெரியாது. சினிமா அப்படியே விழுங்கிவிடும். எனது இடைவெளி என்று தெரியவில்லை. இதுலேயே தான் இருக்கிறேன். இது எனக்கு ஸ்பெஷலான படம்.

சன்னி லியோன் இப்படத்தில் வந்தபிறகு தான் இது பெரிய படமாக மாறியது. அவர் மிகவும் அர்ப்பணிப்பு உள்ள நடிகை. எனது முதல்படமான சிந்தனை‌செய் மிகவும் சீரியஸான படம். ஆனால் இது காமெடிப் படம். காமெடி செய்வது சுலபமல்ல. எனது உழைப்பு என்று வீண் போகாது என்று நினைக்கிறேன்” என்றார்.

நடிகர் சதீஷ் : “நமது கலாச்சார உடையில் சன்னி வந்துள்ளார். அதற்கு நன்றி. உணர்வுப்பூர்வமான காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. திரையரங்குகளில் பார்த்து சந்தோஷமாக இருங்கள். நான் இயக்குனர் ஆனால் அதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும். அதில் நாயகியாக சன்னி லியோன் நடித்தால் சூப்பராக இருக்கும்” என்றார்.

சன்னி லியோன் :உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. இப்படத்தில் பணியாற்றியது மிகவும் அருமையாக இருந்தது. ’ஸ்டைலிஷ் தலைவி’யாக என்னை உருவாக்கியதற்கு அனைவருக்கும் நன்றி. குழந்தைகள் எல்லாம் நமது எதிர்காலம். அவர்களின் அன்பை நினைத்து கண்கலங்குகிறது. தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்வேன்” என்றார்.

இதையும் படிங்க: மாபெரும் வெற்றி பெற்ற சர்தார் திரைப்பட இயக்குனருக்கு பிரம்மாண்ட பரிசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.