ETV Bharat / entertainment

'தளபதி 67'-ல் இணையும் நட்சத்திர நடிகர்கள்… அடுத்தடுத்து வெளியான அப்டேட்! - sanjay dutt

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தில், சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி ஆகியோர் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘தளபதி 67’ல் இணையும் நட்சத்திர நடிகர்கள்

author img

By

Published : Jan 31, 2023, 6:09 PM IST

வாரிசு படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு ‘தளபதி 67’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. மாஸ்டர் பட வெற்றிக்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் இணையும் திரைப்படம் என்பதால் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நாளிலிருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சினிமா வட்டாரத்தில் கிடைத்த தகவலின்படி லோகேஷ் கனகராஜின் இந்தப் படமும் lokesh cinematic universe (LCU)வை சார்ந்தது என்பதால், இந்தப் படத்தில் பல்வேறு நட்சத்திர நடிகர்கள் இணையவுள்ளதாக கூறப்பட்டது. இதனை உறுதி செய்யும் விதமாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதாக செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் ‘தளபதி 67’ படத்தின் அப்டேட்கள் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் அடுத்தடுத்து வெளியாகும் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிரந்தர சூப்பர் ஸ்டாரே! ஒழுங்கா போய் வேலையைப் பாரு.. ரசிகருக்கு ரஜினி கூறிய அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.