ETV Bharat / entertainment

திரைப்படமாகும் இசைஞானியின் வாழ்க்கை வரலாறு - ஹீரோ யார் தெரியுமா? - தமிழ் சினிமா

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசை ஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தாவல் வெளியாகியுள்ளது

author img

By

Published : Aug 3, 2023, 1:20 PM IST

சென்னை:இசைஞானி இளையராஜா அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 80 மற்றும் 90களில் இசை உலகில் கொடி கட்டிப் பறந்தார். தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.

இசை மேஸ்ட்ரோ என அறியப்படும் இவர் இப்போது வரையிலும் இசை அமைத்து வருகிறார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான விடுதலை படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளையராஜா தன் வாழ்க்கை வரலாற்றை தன் கைப்படவே எழுதி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், அவர் எழுதி வரும் அவரது வாழ்க்கை வரலாற்றில் சில சுவாரஸ்யமான பகுதிகளைப் நெருங்கிய நண்பர்களிடம் படித்து காண்பிப்பது அவருக்கு மிகவும் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்றால் நடிகர் தனுஷ், இயக்குநர் பால்கி மற்றும் அவருடைய சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே படித்து காட்டியதாகவும் கூறப்படுகிறது.

தன் கதாபாத்திரத்தை நடிகர் தனுஷால் மட்டுமே சிறப்பாக செய்ய முடியும் என இளையராஜா நம்புகிறாராம். ரஜினி, கமல், தனுஷ் போன்ற நடிகர்களே இளையராஜாவிற்கு நெருங்கிய ஹீரோக்கள் என்றும், இவர்களிடம் இளையராஜாவிற்கு பிரியம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ், இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதில் வாழ்நாள் கனவு என்று சொல்லும் படியான ஆர்வம் கொண்டிருக்கிறார்.

அவருக்கான பெரும் சம்பளம் பற்றியெல்லாம் இதில் அவர் கவலைப்படவே இல்லை என்றும் “இந்தப் படத்தை கண்டிப்பாக நான் நடித்துக் கொடுக்கிறேன்” என்று இளையராஜாவிடம் தனுஷ் உறுதி அளித்துவிட்டார் என்றும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்திற்கான கதையை இளையராஜா எழுதி முடித்து விட்டார் என்றும் அதை இறுதி செய்யும் பணியை மட்டுமே இப்போது செய்து கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இயக்குநர் பால்கி இந்தப் படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டது. மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் உருவாகி வெளியாக வாய்ப்பிருக்கிறது. இதை ஒட்டியே தனுஷ் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு வந்து விடுகிறார். அதன் பின் திரைக் கதையைப் பற்றி ஆலோசனை நடத்தி விட்டுதான் வீட்டிற்குத் திரும்புகிறார் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் படத்தைத் தயாரிக்க முன் வந்ததாகவும் ஆனால் நானே தயாரிக்கிறேன் எனக்கு இது கௌரவமான தயாரிப்பாக இருக்கும் என தனுஷ் சொல்லி விட்டாராம். அடுத்த ஆண்டு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'ஓரளவு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்' - வெளியானது ஜெயிலர் படத்தின் டிரெய்லர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.