டைரக்டராக அறிமுகமாகி தற்போது முழு நேர நடிகராக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா மெர்சல், மாநாடு , சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் 'டான்' படம் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளார்.
இந்த நிலையில் மொழி, அபியும் நானும் பட டைரக்டர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள 'பொம்மை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
"பொம்மை" பட ட்ரெய்லரை உலகம் முழுக்க சுமார் 600 திரையரங்குகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் "விக்ரம்" படம் வெளியாகும் திரை அரங்குகளில் "பொம்மை" படத்தின் ட்ரெய்லர் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. 'மான்ஸ்டர்' படத்திற்குப் பிறகு எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் மீண்டும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விக்ரம் முன்பதிவு "சும்மா கிழி"!