ETV Bharat / entertainment

எஸ்.ஜே. சூர்யாவின் வெப் சீரிஸுக்கு குவியும் பாராட்டு! - வதந்தி வெப் சீரிஸ்

நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் 'வதந்தி- தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' என்னும் வெப் சீரிஸ், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

d
d
author img

By

Published : Dec 3, 2022, 8:44 PM IST

திரைப்படங்கள், சீரிஸ் உள்ளிட்டவற்றை டிஜிட்டல் தளத்தை பார்வையிடும் ரசிகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த தருணத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது அதிக அளவிலான உள்ளடக்கத்தை ரசிகர்கள் பார்வையிடுகிறார்கள்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று புதிய படைப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும், காத்திருப்பும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது பழக்கமாகவும் மாறிவிட்டது. இருப்பினும் எஸ்.ஜே சூர்யாவின் ரசிகர்கள், ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வெப் சீரிஸை காண்பதற்கு பேரார்வம் கொண்டிருந்தனர்.

அமேசான் ப்ரைம் வீடியோவில் அசல் தமிழ் தொடரான ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' டிசம்பர் 2 ஆம் தேதியன்று வெளியானது. ஏராளமான ரசிகர்கள் விடியற்காலை வரை காத்திருந்து எஸ்.ஜே சூர்யாவை டிஜிட்டல் தளத்தில் கண்டு ரசித்தனர். காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் எஸ்.ஜே சூர்யாவிற்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களும் அவரது தனித்துவமான நடிப்பைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த சீரிஸை எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், இந்த தொடரில் எஸ்.ஜே சூர்யாவிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிகொனந்துள்ளார். அவரது சிறந்த நடிப்பிற்கான பட்டியலில் இந்த தொடரும் இடம்பெறும். கிரைம் திரில்லர் ஜானரில் தயாராகி, எட்டு அத்தியாயங்களை கொண்டதாக இருந்தாலும், ரசிகர்கள் இந்த தொடரை முழுமையாக கண்டு ரசித்து, தங்களது விமர்சனங்களையும், எண்ணங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' எனும் வலைதளத் தொடரில், எஸ்.ஜே. சூர்யாவின் அபாரமான நடிப்பு திறமைக்காக ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டி வருகிறார்கள். ரசிகர்களின் அன்பு மழையிலும், பாராட்டிலும் எஸ்.ஜே சூர்யா மூழ்கி விட்டார்.

இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக ஆளுமை இருந்தாலும், பல திறமையான படைப்புகளை வழங்கி இருந்தாலும், நடிகராக வேண்டும் என்ற அவரது அசலான ஆசை, இந்த தொடரில் நிறைவேறி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அவரை மலை அளவுக்கு புகழ்ந்து பேசும் நிலை உருவாகி, தொடர்கிறது.

இதையும் படிங்க: வெளியானது 'பாபா' படத்தின் புதிய டிரைலர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.