ETV Bharat / entertainment

சந்தானத்தின் கிக் முதல் காதல் காவியம் குஷி வரை ரசிகர்களை ரசிக்க வைக்கும் இந்த வார மூவி ரிலீஸ்! - Khushi

Movie Releases in this week: சந்தானத்தின் 'கிக்’, யோகி பாபுவின் 'லக்கிமேன்', பாரதிராஜாவின் 'கருமேகங்கள் கலைகின்றன', சரத்குமாரின் ‘பரம்பொருள்’, ஹம்ரேஷின் ‘ரங்கோலி’, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஆகிய 6 படங்கள் திரைக்கு வர உள்ளன.

6 படங்கள் நாளை வெளியாக உள்ளன
6 படங்கள் நாளை வெளியாக உள்ளன
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 12:24 PM IST

சென்னை: தமிழ் திரையுலகில் இந்த வார வெளியீடாக நாளை (செப்டம்பர் 1) ஒரே நாளில், ஒரு டப்பிங் படம் உள்பட 6 தமிழ் படங்கள் திரைக்கு வருகின்றன. தமிழ் சினிமாவில் வாராவாரம் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. இதனால் வேறு எந்த படங்களும் வெளியாகவில்லை. அதற்கு அடுத்த வாரமும் குறிப்பிடத்தக்க வகையில் படங்கள் வெளியாகவில்லை.

அதனை‌த் தொடர்ந்து கடந்த வாரம் ஜிவி பிரகாஷ் குமார் நடித்த ‘அடியே’, துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் இந்த வாரம் மட்டும் 6 படங்கள் வெளியாக உள்ளன. சந்தானத்தின் 'கிக்’, யோகி பாபுவின் 'லக்கிமேன்', பாரதிராஜாவின் 'கருமேகங்கள் கலைகின்றன', சரத்குமாரின் ‘பரம்பொருள்’, ஹம்ரேஷின் ‘ரங்கோலி’, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஆகிய ஆறு படங்கள் நாளை வெளியாக உள்ளன.

யோகி பாபுவின் ‘லக்கிமேன்’:

பொம்மை நாயகி, யானை முகத்தான் படங்களுக்கு பிறகு யோகிபாபு நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'லக்கிமேன்'. பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் யோகிபாபுவிற்கு ஜோடியாக ரேச்சல் ரெபேக்கா நடிக்க, வீரா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் வாழ்க்கையை பற்றி பேசும் லக்கிமேன் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படம் பத்திரிகையாளர் காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபுவின் ‘லக்கிமேன்’
யோகி பாபுவின் ‘லக்கிமேன்’

சந்தானத்தின் ‘கிக்’:

நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் 15வது திரைப்படம் தான் 'கிக்'. லவ்குரு, கானா பஜானா, விசில், ஆரஞ்ச் போன்ற கன்னடப் படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பாக்யராஜ், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோ பாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர்.

காதல், நகைச்சுவை கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள 'கிக்' படமும் நாளை வெளியாக உள்ளது. சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் மிகப்பெரிய வெற்றியடைந்ததால் உடனடியாக இப்படத்தை வெளியிட்டு வசூல் எடுக்கலாம் என்பது தயாரிப்பாளரின் திட்டமாக உள்ளது.

சந்தானத்தின் ‘கிக்’
சந்தானத்தின் ‘கிக்’

பாரதிராஜாவின் ‘கருமேகங்கள் கலைகின்றன’:

தங்கர்பச்சான் இயக்கத்தில், இயக்குநர்கள் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர்கள் அதிதி பாலன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம் உருவாகி உள்ளது. ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படமும் நாளை வெளியாக இருக்கிறது. இப்படம் மனித உணர்வுகளை பற்றிப் பேசுகிறது.

பாரதிராஜாவின் ‘கருமேகங்கள் கலைகின்றன’
பாரதிராஜாவின் ‘கருமேகங்கள் கலைகின்றன’

சரத்குமாரின் ‘பரம்பொருள்’:

அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா ஆகியோர் நடிப்பில் சிலை கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘பரம்பொருள்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படமும் நாளை திரைக்கு வருகிறது.

சரத்குமாரின் ‘பரம்பொருள்’
சரத்குமாரின் ‘பரம்பொருள்’

ஹம்ரேஷின் ‘ரங்கோலி’:

வசந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வாலி மோகன் தாஸ், புதுமுகங்கள் ஹம்ரேஷ் மற்றும் பிரார்த்தனா ஆகியோரை வைத்து 'ரங்கோலி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இப்படம் பள்ளி பருவ வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குநர் ஏ.எல் விஜய்யின் சகோதரியின் மகனான ஹம்ரேஷ் நாயகனாக நடித்துள்ள இப்படமும் நாளை வெளியாக உள்ளது.

ஹம்ரேஷின் ‘ரங்கோலி’
ஹம்ரேஷின் ‘ரங்கோலி’

விஜய் தேவரகொண்டாவின் 'குஷி':

விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் 'குஷி' திரைப்படம் உருவாகி உள்ளது. ஷிவ நிர்வாணா இயக்கி உள்ள இப்படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளிலும் நாளை திரைக்கு வருகிறது. ஆறு படங்கள் ஒரே வாரத்தில் வெளியாவது திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் 'குஷி'
விஜய் தேவரகொண்டாவின் 'குஷி'

இதையும் படிங்க: Jawan audio launch: "ஜவான் இந்தி படமல்ல... இந்திய படம்" - அனிருத் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.