நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.
எப்போது இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சமீபகாலமாக முழு ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொள்வாரா எனப் பல யூகங்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்கவிருப்பதாகவும் முக்கிய வேடத்தில் ரம்யாகிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சமீபத்திய யூ-ட்யூப் பேட்டியில் சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது, ரஜினியின் படத்தில் நான் நடிப்பதாகவும் பாடல் எழுதுவதாகவும் செய்தி பரவி வருகிறது. ஆனால், அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நெல்சன் என்னை இதுவரை அழைக்கவில்லை. மேலும், படம் தற்போது ஆரம்பகட்ட நிலையில்தான் இருப்பதால், இதுகுறித்து எதுவும் பேச முடியாது என்று கூறிவிட்டாராம்.
இதையும் படிங்க: AK Latest click: வைரலாகும் அஜித் குமாரின் புதிய புகைப்படம்