'அண்ணாத்த' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குகிறார். இது ரஜினியின் 169ஆவது படமாக உருவாக உள்ளது.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர். அதிலும் படத்தை வரும் தீபாவளிக்கே வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோன் ஆகிய இருவரில் ஒருவரை உறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
இந்நிலையில் இப்படத்தில் ரஜினியின் மகனாக நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க:இஸ்லாமிய நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை!