சென்னை: தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் 2023 (SIIMA 2023) துபாயில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய திரைத்துறையைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இந்த வருட சைமா (SIIMA) திரைப்பட விழா இதற்கு முன் நடந்ததை விட மிகப்பெரும் நிகழ்வாக துபாய் உலக வர்த்தக மையத்தில் செப்டம்பர் 15, 16 தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுவரை சைமா விருதுகள் இந்தியாவில் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. இந்த வருடம் சைமா விருது வழங்கும் விழாவை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி மற்றும் சீதாராமம் புகழ் நடிகை மிருனால் தாகூர் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். இருவருக்குமான கெமிஸ்ட்ரி இந்த விழாவிற்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது.
மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய திரைத்துறையைச் சேர்ந்த பல நட்சத்திரங்கள் சைமா விருது விழாவில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்கள் பின்வருமாறு,
- சிறந்த இயக்குநர் (மலையாளம்): அமல் நீரத் (bheeshma parvam), கலீத் ரஹ்மான் (thallumaala), மகேஷ் நாராயணன் (ariyippu), தருண் மூர்த்தி (saudi vellakka), வினீத் ஸ்ரீனிவாசன் (hridhayam).
- சிறந்த இயக்குநர் (தமிழ்): கௌதம் ராமச்சந்திரன் (கார்கி), லோகேஷ் கனகராஜ் (விக்ரம்), மணிகண்டன் (கடைசி விவசாயி), மணிரத்னம் (பொன்னியின் செல்வன் 1), மித்ரன் ஆர் ஜவஹர் (திருச்சிற்றம்பலம்).
- சிறந்த இயக்குநர் (கன்னடம்): அனுப் பண்டாரி (vikrant rona), டார்லிங் கிருஷ்ணா (love mocktail 2), கிரண்ராஜ் கே (777 charlie), பிரஷாந்த் நீல் (kgf 2), ரிஷப் ஷெட்டி (kantara)
- சிறந்த இயக்குநர் (தெலுங்கு): சந்து மொண்டேட்டி (karthikeya 2), ஹனு ராகவபுடி (sita ramam), எஸ்.எஸ். ராஜமௌலி (RRR), சஷி கிரண் டிக்கா (major), விமல் கிருஷ்ணா (Dj tillu).
- சிறந்த நடிகை (மலையாளம்): தர்ஷனா ராஜேந்திரன் (jaya jaya jaya hey), கல்யாணி ப்ரியதர்ஷன் (Bro daddy), கீர்த்தி சுரேஷ் (vaashi), நவ்யா நாயர் (oruthee), ரேவதி (bhoothakalam), அனஸ்வரா ராஜன் (super sharanya).
- சிறந்த நடிகை (தமிழ்): ஐஷ்வர்யா லட்சுமி (கட்டா குஸ்தி), துஷாரா விஜயன் (நட்சத்திரம் நகர்கிறது), கீர்த்தி சுரேஷ் (சாணிக் காயிதம்), நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்), சாய் பல்லவி (கார்கி), த்ரிஷா (பொன்னியின் செல்வன் 1).
- சிறந்த நடிகை (கன்னடம்): ஆஷிகா ரங்கநாத் (kayimo), சயித்ரா அச்சார் (gilky), ரச்சிதா ராம் ( monsoon raaga), சப்தமி கவுடா (kantara), ஷர்மிளா மந்த்ரா (gaalipata 2), ஸ்ரீநிதி ஷெட்டி (kgf 2).
- சிறந்த நடிகை (தெலுங்கு): மீனாட்சி சவுத்ரி (hit second case), மிருனால் தாகூர் (sita ramam), நேஹா ஷெட்டி (dj tillu), நித்யா மேனன் (bheemla nayak), சமந்தா (yashoda), ஸ்ரீலீலா (dhamaka).
- சிறந்த நடிகர் (மலையாளம்): பசில் ஜோசப் (jaya jaya jaya hey), குஞ்சக்கோ போபன் (nna than case kodu), மம்மூட்டி (bheeshma parvam, rorscach), நிவின் பவ்லி (padavettu), ப்ரித்விராஜ் (jana gana mana).
- சிறந்த நடிகர் (தமிழ்): தனுஷ் (திருச்சிற்றம்பலம்), கமல்ஹாசன் (விக்ரம்), மாதவன் (ராக்கெட்ரி), சிலம்பரசன் (வெந்து தணிந்தது காடு), விக்ரம் (பொன்னியின் செல்வன் 1, மகான்).
- சிறந்த நடிகர் (கன்னடம்): புனித் ராஜ்குமார் (james), ரக்ஷித் ஷெட்டி (charlie 777), ரிஷப் ஷெட்டி (kantara), சிவராஜ்குமார் (vedha), சுதீப் (vikrant rona), யாஷ் (kgf 2).
- சிறந்த நடிகர் (தெலுங்கு): ஆதிவிஷேஷ் (major), துல்கர் சல்மான் (sitaramam), ஜுனியர் என்டிஆர் (RRR), நிகில் சித்தார்தா (karthikeya 2), ராம் சரண் (RRR), சித்து ஜொன்னலகட்டா (dj tillu)
இதையும் படிங்க: “இது எப்டி இருக்கு?” - காலங்களைக் கடந்த சப்பாணி, மயிலு காவியம் - 16 வயதினிலே கடந்து வந்த பாதை!