ETV Bharat / entertainment

தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற "சாட் பூட் த்ரி"

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள "சாட் பூட் த்ரி" திரைப்படத்திற்கு தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்காண விருது வழங்கப்பட்டது.

தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற "சாட் பூட் த்ரி"
தென்கொரிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற "சாட் பூட் த்ரி"
author img

By

Published : Oct 13, 2022, 5:21 PM IST

அருணாச்சலம் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகா, வெங்கட் பிரபு, யோகி பாபு, சிவாங்கி ஆகியோர் நடித்துள்ள "சாட் பூட் த்ரி" திரைப்படத்திற்கு தென் கொரிய தலைநகர் சியோலில் அக்டோபர் 7-8 தேதிகளில் நடந்த செல்லப்பிராணிகள் குறித்த பன்னாட்டு திரைப்பட விழாவில் (International Comap on Animal FIlm Festival) சிறந்த திரைப்படத்திற்கான விருது (ICAFF Excellence for Feature) வழங்கப்பட்டது.

விருதிற்கான சான்றிதழையும், பணமுடிப்பையும் விழாவில் கலந்துகொண்ட படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான அருணாச்சலம் வைத்யநாதன் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முனைவர் பு. பாஸ்கரன், செயலாளர், கலந்துகொண்டு இயக்குநரை வாழ்த்தி தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கினார்.

பின்னர் இப்படம் கொரிய மக்களுக்கு திரையிடப்பட்டது. படத்தில் இடம்பெற்ற குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கும் இடையேயான காட்சிகள் தமக்கு நெருக்கமாக இருந்ததாக கொரிய மக்கள் தெரிவித்தனர். 2016ஆம் ஆண்டு முதல் நடக்கும் இந்த பன்னாட்டு திரைப்பட விழாவில் விருதுபெரும் முதல் இந்திய திரைப்படம் "சாட் பூட் த்ரி" என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு பற்றி கருத்து வெளியிட்ட படத்தின் இயக்குநர், நாடு, மொழி உள்ளிட்ட காரணிகள் கடந்து கொரியாவில் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு "அன்பிற்கோர் பஞ்சமில்லை" என்ற தன் படத்தின் மூலக்கருவை உள்ளபடியே இயல்பில் உணர்த்தியது தமக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் விருதிற்கான விண்ணப்பங்கள் பன்னாட்டு அளவில் பெறப்பட்டு செப்டம்பர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்பட்டன. புகழ் பெற்ற கொரிய திரைப்பட இயக்குநர்களான சாங் பியோம் கோ, சாங் ஜே லிம், மற்றும் கிவி தோக் லீ ஆகியோர் அடங்கிய குழு விருதிற்கான படங்களை தெரிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'சங்கங்களிலே என் வாழ்க்கை சங்கமித்து போய்விட்டது' - இயக்குனர் ஆர்.கே.செல்வமணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.