ETV Bharat / entertainment

ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கும் ஷங்கர் - இந்தியன் இரண்டு

ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் ஷங்கர், இரண்டு படங்களிலும் ஹீரோக்கள் நடிக்கும் காட்சிகளை ஷங்கர் இயக்குவதாகவும், ஹீரோக்கள் நடிக்காத நடனம் உள்ளிட்ட மற்ற காட்சிகளை அவரது துணை இயக்குநர்கள் இயக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கும் சங்கர்
ஒரே நேரத்தில் 2 படங்களை இயக்கும் சங்கர்
author img

By

Published : Aug 25, 2022, 5:28 PM IST

இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரமாண்ட படங்களே நமது நினைவுக்கு வரும். அதனால், அவர் பொதுவாக ஒரு படத்தை இயக்கி முடித்ததும் தான், அடுத்த படத்திற்குச்செல்வார். ஆனால், தற்போது கரோனா தாக்கம் உள்ளிட்ட சில கால சூழ்நிலைகளால், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் சூழ்நிலைக்கு அவர் ஆளாகி இருக்கிறார்.

'இந்தியன் 2' படத்தை எப்போது தொடங்கினாரோ அப்போதிருந்து அவருக்கு தலைவலி தான். கரோனா தொற்று, படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து, கமலுக்கு உடல்நலக்குறைவு எனப் பல்வேறு பிரச்னைகள் சூழ்ந்துகொள்ள நொந்துபோனார், ஷங்கர். இதனால் நீதிமன்ற வழக்கு வரை சென்றதால், இந்தியன் 2 படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, தெலுங்கில் ராம் சரணை வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டார்.

இந்நிலையில் இந்தியன் 2 பிரச்னைகள் ஒருவழியாக முடிவுக்கு வர, மீண்டும் இப்படத்தை இயக்க ஆயத்தமானார். ஆனால், இதனால் ராம் சரண் படத்திற்கு சிக்கல் எழுமே என்று பேசப்பட்டது. இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக ஷங்கர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும், ராம்சரண் படத்தின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

காரணம், 'இந்தியன் 2' படத்தை இயக்கச்சென்றுவிட்டால் ராம்சரண் படம் அப்படியே நின்று விடுமோ என அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருந்ததால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அந்த அறிவிப்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் அதன் தயாரிப்பாளர் தில் ராஜுவையும் டேக் செய்துள்ளார், இயக்குநர் ஷங்கர்.

சங்கர் ட்வீட்
சங்கர் ட்வீட்

இந்த இரண்டு படங்களின் ஹீரோக்கள் நடிக்கும் காட்சிகளை ஷங்கர் இயக்குவார் என்றும்; ஹீரோக்கள் நடிக்காத, மேலும் நடனம் உள்ளிட்ட மற்றக்காட்சிகளை அவரது இரண்டாவது யூனிட் துணை இயக்குநர்கள் இயக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் ராம்சரணின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார், இயக்குநர் ஷங்கர். இதனால் முன் எப்போதும் இல்லாத வகையில் இரட்டை குதிரையில் சவாரி செய்யும் நிலைக்கு ஷங்கர் தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு நேரில் வாழ்த்துக்கூறிய நடிகர் சங்கப்பொருளாளர் கார்த்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.