நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஊர்வசி நடிப்பில் ‘வீட்ல விஷேசம்’ திரைப்படம் இன்று(ஜூன் 17) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்தத்திரைப்படம் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் ஹிந்தியில் வெளியான ‘பதாய் ஹோ’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், இந்தப்படத்தில் தனக்கு இதுவரை தான் செய்யாத வித்தியாச கதாபாத்திரத்தைத் தந்த இயக்குநர் மற்றும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜிக்கு நன்றி என நடிகர் சத்யராஜ் காணொலி வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரஜினி - நெல்சன் திரைப்படத்திற்கு டைட்டில் 'ஜெயிலர்'