சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் நிர்வனத்தின் சார்பில் லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள “காரி” திரைப்படத்தை, இயக்குநர் ஹேமந்த் எழுதி இயக்கியுள்ளார். காரி படத்தில் சசிகுமார், பார்வதி அருண், ஜே.டி.சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி, நாகிநீடு, ராம்குமார் கணேசன், சம்யுக்தா, பிரேம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஒரு சாம்பியன் ரேஸ் ஜாக்கி, மல்டி மில்லியனர் மற்றும் ஒரு எளிய கிராமத்து பெண், இந்த மூன்று கதாபாத்திரங்களும் காரையூரில் உள்ள சில கிராமவாசிகளும் இந்த கதையின் மையம். பல மைல்களுக்கு அப்பால், தனித்தனியாக வேறு வேறு இடங்களில் வாழும் இவர்களை விதி ஒரு பிரச்னையில் ஒன்றாக இணைக்கிறது.
சசிகுமார் சென்னையில் வாழும் சேது எனும் குதிரை ஜாக்கியாக நடித்திருக்கிறார். அவரது தந்தை - வெள்ளைச்சாமி (ஆடுகளம் நரேன்) இறந்த பிறகு அவரது வாழ்க்கை ஒரு திருப்பத்திற்கு உள்ளாகிறது, ஒரு கட்டத்தில் அவரது செல்ல குதிரையும் கொல்லப்படுகிறது.
எதிரிகளான எஸ்.கே.ஆர் (ஜே.டி. சக்ரவர்த்தி), இறைச்சி வியாபாரம் மற்றும் விலங்குகளைச் சுரண்டுவதில் ஈடுபட்டிருக்கும் ஒரு பிஸினஸ்மேன், இவர்கள் மோதிக்கொள்வது ஏன் என்பதே படம். கிராமப்புற மண்சார்ந்த வாழ்வியல், விலங்குகளின் விடுதலை, பெருநிறுவனங்களின் பேராசை, இறைச்சி நுகர்வு நெறிமுறைகள் மற்றும் இதுவரை திரையில் பேசாத பல விஷயங்களளை இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றது. இந்நிலையில் இப்படம் வருகின்ற 23ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதையும் படிங்க:2022ஆம் ஆண்டு வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் படங்கள் ஒரு பார்வை!