ETV Bharat / entertainment

'கபிலன் ரிட்டன்ஸ்' சார்பட்டா 2 அப்டேட் வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்! - Sarpatta part 2

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

Sarpatta Parambarai movie second part announcement
சார்பட்டா பரம்பரை
author img

By

Published : Mar 7, 2023, 10:42 AM IST

சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி தொடங்கி தற்போது வரை தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான படங்களின் மூலம் குறிப்பிடத்தக்க இயக்குனராக இருப்பவர். இவரது படங்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படங்களாக இருக்கும். மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்கள் இவரது இயக்கத் திறமைக்குச் சான்றாக அமைந்தன.

இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரித்து, இயக்கி நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், ஷபீர், ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. 1960களில் சென்னையில் பிரபலமாக இருந்த சார்பட்டா பரம்பரை, இடியப்ப பரம்பரை ஆகிய இரண்டு குழுவினரின் குத்துச்சண்டை போட்டியை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: சர்க்கரை நோயால் அவதிப்படும் "பிதாமகன்" தயாரிப்பாளர்: உதவி வேண்டி வீடியோ வெளியீடு!

ஓடிடியில் வெளியானாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ஆர்யா, பசுபதி உள்ளிட்ட அனைவரது நடிப்பும் பேசப்பட்டது. அக்காலத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார் இயக்குனர் பா.ரஞ்சித். ஆர்யாவும் கபிலன்‌ என்ற‌ கதாபாத்திரத்துக்காகக் கடுமையாக உழைத்திருந்தார். உடல் எடையை கூட்டி முரட்டு ஆசாமியாக படத்தில் தோன்றியிருந்தார்.

ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பசுபதி, தனக்கே உரிய நடிப்பை கொடுத்திருந்தார். அதுவும் ஆர்யாவும் பசுபதியும் சைக்கிளில் போகும் காட்சி மீம்ஸ் டெம்ப்ளேட் ஆகின. அந்த அளவிற்கு படத்தின் ஒவ்வொரு காட்சியும் பேசப்பட்டது. கரோனா காரணமாகத் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனாலும் ஓடிடியிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று பா.ரஞ்சித் செல்லும் இடங்களில் எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தனர். மேலும் படத்தின் ஒரு கதாபாத்திரமான டான்சிங் ரோஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது. இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கபிலன் ரிட்டர்ன்ஸ். சார்பட்டா பரம்பரை 2 விரைவில் என்று பதிவிட்டுள்ளார்.

இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் ஆர்யாவின் ஷோ பீப்பிள் இணைந்து தயாரிக்கின்றன. பா.ரஞ்சித்தின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். சார்பட்டா பரம்பரை 2 படத்தின் அறிவிப்பினை சமூக வலைதளங்களில் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் காதலனால் தாக்கப்பட்ட தமிழ் நடிகை.. இன்டாகிராமில் தீயாய் பரவும் போட்டோ..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.