ETV Bharat / entertainment

சர்க்கார் வித் ஜீவா - ஆஹா ஓடிடி தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ - OTT platform in tamil

ஆஹா ஓடிடி தளம் ‘சர்க்கார் வித் ஜீவா’ என்ற நிகழ்ச்சியுடன் தனது முதல் ரியாலிட்டி ஷோவை தொடங்குகிறது.

சர்க்கார் வித் ஜீவா - ஆஹா ஓடிடி தளத்தின் முதல் ரியாலிட்டி ஷோ

author img

By

Published : Sep 13, 2022, 12:05 PM IST

ஆஹா தமிழ் ஓடிடி தளத்தின் முதல் ரியாலிட்டி கேம் ஷோவான 'சர்கார் வித் ஜீவா', செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வெளியாகிறது. தமிழ் மொழிக்கென பிரத்யேகமாக மிகப்பெரிய ரியாலிட்டி ஷோக்களை ஆஹா உருவாக்கி வருவது பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தெலுங்கில் இரண்டு ஆண்டுகளாக நல்ல வரவேற்பை பெற்று இயங்கி வரும் ஆஹா, தமிழுக்கென பிரத்யேகமாக படைப்புகளை உருவாக்க ஆரம்பித்துள்ளது. முதல் படியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜீவா, ஒவ்வொரு வாரமும் நான்கு பிரபலங்கள் விளையாடும் 'சர்கார் வித் ஜீவா' என்ற கேம் ஷோவில் தொகுப்பாளராக தனது OTT அறிமுகத்தை தொடங்க உள்ளார்.

இதுகுறித்து நடிகர் ஜீவா கூறுகையில், “எல்லோரும் எஸ்எம்எஸ் (சிவா மனசுல சக்தி) பட ஜீவாவை மீண்டும் எப்போது பார்க்கலாம் என்று கேட்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் என்னை மீண்டும் அப்படி பார்ப்பது மட்டுமல்லாமல், எந்த நேரத்திலும் விளையாட்டின் விதிகளை வளைக்கும் ஆற்றலுடன் இயங்கும், ஒரு இனிமையான தொகுப்பாளராகவும் பார்ப்பார்கள்.

‘சர்க்கார் வித் ஜீவா அறிமுக நிகழ்ச்சி
‘சர்க்கார் வித் ஜீவா அறிமுக நிகழ்ச்சி

சர்க்கார் என்னும் இந்த கேம் ஷோவினை நான் மிகவும் ரசித்தேன். என் ரசிகர்களும் இதை விரும்புவார்கள் என்று நம்புகிறேன். இங்க ஆடுறதுதான் அவங்க; ஆனா ஆட்டம் என்னோடது. அவர்கள் விளையாட வந்திருக்கலாம். ஆனால் நான்தான் இங்கே உண்மையான வீரர்” என கூறினார்.

இந்த ஷோவில் அனைவரும் விரும்பும் பிரபலங்களான யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி மற்றும் வைபவ் ஆகியோர் முதல் எபிசோடை தொடங்கி வைப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேள்வி-பதில் அடிப்படையிலான இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவார்கள்.

10 சுற்று கேள்விகளுக்கு ஏலம் விடுவார்கள். நட்சத்திரங்களைப் பற்றி இதுவரை கேள்விப்படாத ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்ட கேள்விகளுடன் பொழுதுபோக்கும் கலந்து, இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களுக்கு ஒரு பெரிய விருந்தை அளிக்கவுள்ளது.

மேலும் இதுகுறித்து ஆஹா தளத்தின் சிஇஓ அஜித் தாக்கூர், "ஆஹா அதன் பார்வையாளர்களுக்கு 100% உள்ளூர் பொழுதுபோக்குகளை மிக உயர்ந்த தரத்துடன் வழங்க உறுதி எடுத்துள்ளது. நேர்த்தியான மாறுபட்ட அனுபவத்துடன் கூடிய ரியாலிட்டி ஷோக்களை உருவாக்குவதில் ஆஹா சிறந்து விளங்குகிறது.

உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த ‘கேம் ஷோக்களை’ வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முழுமையான பொழுது போக்கும் அசத்தலான வேடிக்கையுடனும் நடிகர் ஜீவா 52 நட்சத்திரங்கள் கலந்து கொள்ள 13 வார நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கவுள்ளார்.

ஆஹா தமிழ் 100% உள்ளூர் பொழுதுபோக்குகளை வழங்கும் தளம். பிளாக்பஸ்டர் திரைப்படங்களான ஜீவி 2, குருதி ஆட்டம், மாமனிதன், கூகுள் குட்டப்பா, மன்மத லீலை, ரைட்டர் மற்றும் அம்முச்சி 2, ஈமோஜி, ஆன்யாஸ் டுடோரியல், ஆகாஷ் வாணி, இரை உள்ளிட்ட வெப் தொடர்கள் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்று வருகிறது.

அடுத்ததாக வெளியாகவுள்ள ‘சர்கார் வித் ஜீவா’, ரியாலிட்டி ஷோக்களில் தனித்துவமானதாக ரசிகர்களை கவரும். நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.1 உடன் சிறந்த ஒளிபரப்பு சேவையினை ஆஹா தளம் வழங்கி வருகிறது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை உண்டு...!' - சீதா ராமம் நடிகை மிருணாள் தாக்கூர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.