ETV Bharat / entertainment

’மஞ்சு வாரியர் ஏன் அமைதி காக்கிறார்..?’ - இயக்குநர் சனல்குமார் சசிதரன் கேள்வி - மஞ்சு வாரியர்

சில மாதங்களுக்கு முன்பு நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சனல் குமார் சசிதரன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நிலையில், மீண்டும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

’மஞ்சு வாரியர் ஏன் அமைதி காக்கிறார்..?’ - இயக்குநர் சனல்குமார் சசிதரன்

author img

By

Published : Oct 2, 2022, 12:29 PM IST

நடிகை மஞ்சு வாரியர் தன் மீது பொய்யான புகார் அளித்துள்ளதாக ஜாமீனில் வெளிவந்துள்ள இயக்குநர் சனல் குமார் சசிதரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் பொய்யான வழக்கில் கைதாகி ஆறு மாதங்கள் ஆகிற்று. ’கையட்டம்’ படத்திலிருந்து என்னை தொடர்ந்தது இன்றுடன் முடிந்துள்ளது. இன்னும் எனது செல்போன் கண்காணிக்கப்படுகிறது. என் மீது பொய் வழக்கு தொடுத்த மஞ்சு வாரியர் அமைதியாக இருக்கிறார். என் மீதான புகார்கள் காவல்துறையால் விசாரிக்கப்படவில்லை. காவல்துறையே அங்கம் வகிக்கும் சதியில் விசாரணை எப்படி நடக்கும்? ஆனால், எனது அழுகையை கேரள கலாச்சார உலகம் எப்படி ஏற்றுக்கொண்டது என்பதுதான் வேதனையான விஷயம்.

நான் உருவாக்கிய 'கஜா திரையுலகம்', 'சினிமா வண்டி' ஆகியவற்றின் பலன்களால் வளர்ந்த சுதந்திரத் தயாரிப்பாளர்கள் கூட, நான் பைத்தியம், மயக்கம், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவன் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நான் அலறுவதும் சட்டவிரோத கைதுகள் பற்றி நான் கூச்சலிடுவதும் திரைப்படத் தயாரிப்பாளராகப் புகழ் பெறுவதற்காகவே என்றும் சிலர் எழுதினர்.

அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். என் வழக்கு விசாரணைக்கு வந்தால், எர்ணாகுளம் காவல்துறையின் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சதி வெளியே வரும். ஆகவே இந்த வழக்கு விசாரிக்கப்படாது. குற்றப்பத்திரிகை எதுவும் வழங்கப்படாது. கிரிமினல் கும்பலுக்கு இந்த சதியைக் மறைப்பதை தவிர வேறு வழியில்லை.

என் மீதான வழக்கில் நான் நிரபராதி என நிரூபிக்கும் வரை படம் எடுக்கப்போவதில்லை. அட, கேரளாவின் கலாச்சார உலகமே, நான் குற்றவாளி என்றால் என்னை விசாரணை செய்து தண்டிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லக்கூடாதா? என் மரணத்திற்குப் பிறகு நான் சொல்வது உண்மை என்று தெரிந்தால், நீ எனக்கு செய்யும் அநியாயம் உன்னை ஆட்டிப்படைக்காதா? கண்ணை மூடினால் நான் இங்கே இருந்தேன் என்ற அடையாளம் போய்விடுமா? கையைக் கழுவினால், விரல்களில் படிந்திருக்கும் என் ரத்தக் கறை நீங்குமா?” எனப் பதிவிட்டுள்ளார்.

மலையாள சினிமா உலகில் தனித்துவம் வாய்த்த இயக்குநர்களில் ஒருவர் சனல்குமார் சசிதரன். இவரின் கலைசார்ந்த திரைப்படைப்புகள் சினிமா ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெறும் வரவேற்பைப் பெற்றன. சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு அபாயம் இருப்பதாகவும், அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று தொடர்ந்து பதிவிட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து, இவர் நடிகை மஞ்சு வாரியருக்கு காதல் தொல்லை கொடுத்ததாகவும், அவரைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் ஆறு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

தற்போது ஜாமீனில் வெளிவந்த இயக்குநர் சனல்குமார் சசிதரன் இந்தப் பதிவை பதிவிட்டுள்ளார். இவரது இயக்கத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியான கயட்டம் என்ற திரைப்படத்தின் போது சனல்குமார் இவருக்கு காதல் தொல்லைகள் கொடுத்துள்ளதாக மலையாள சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வந்தியத் தேவன் பிளேபாயா? பொன்னியின் செல்வன் நாவல் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.