ETV Bharat / entertainment

இதுவும் கடந்து போகும்... மயோசிடிஸ் தோல் நோய்... சமந்தா உருக்கமான பதிவு... - 5 மொழிகளில் வெளியாகவுள்ள யசோதா

நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Etv Bharatஇதுவும் கடந்து போகும் - இன்ஸ்டாவில் சமந்தா உருக்கமான பதிவு

author img

By

Published : Oct 30, 2022, 12:42 PM IST

Updated : Oct 30, 2022, 12:58 PM IST

நடிகை சமந்தா நடிப்பில் 5 மொழிகளில் வெளியாகவுள்ள யசோதா படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே நேற்று (அக்-29) சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைபாடு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், பல மாதங்களாக மயோசிடிஸ் எனப்படும் தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். குறிப்பாக யசோதா படத்திற்கான டப்பிங் பணியின்போதும் கையில் ட்ரிப்ஸ் உடன் காணப்படும் புகைக்கப்படத்தையும் பகிர்ந்தார்.

இந்த பதிவில், "யசோதா டிரெய்லருக்கான உங்கள் வரவேற்பு அபாரமாக இருந்தது. இந்த அன்பைதான் உங்கள் அனைவருடனும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் வாழ்கின்ற வாழ்க்கை என் மீது விழும் முடிவில்லாத சவால்களை சமாளிக்கும் வலிமையை எனக்குத் தருகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்

மேலும் "கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் குறைபாடு இருப்பது தெரியவந்தது. இந்த பாதிப்பு குணமடைந்த பின் இதைப்பகிரலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட இது குணமடைய சிறிது நேரம் எடுக்கும் என்று நினைக்கிறேன். நாம் எப்பொழுதும் வலுவான முன்னோடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை மெதுவாக உணர்ந்துகொண்டேன். இந்த பாதிப்பை ஏற்றுக்கொள்வதற்குதான் நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறேன்.

சில நாட்கள் "உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும்" சோர்வுடன் இருக்கிறேன். இன்னும் ஒரு நாளை என்னால் கையாள முடியாது என்று உணர்ந்தாலும், எப்படியோ அந்த தருணம் கடந்து செல்கிறது. "ஐ லவ் யூ.. ♥️ இதுவும் கடந்து போகும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:கந்தாரா ’வராஹ ரூபம்’ பாடலுக்கு தடை விதித்து கேரள நீதிமன்றம் அதிரடி

Last Updated : Oct 30, 2022, 12:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.